உணர்வுகள்

 

 

பொம்பளை மனசு
ஆழம்…
அன்பால் 
அளந்து விடலாம்..
ஆம்பளை மனசு..?
பாதளம்…!!!!

கொஞ்சம் 
சுயமாக சிந்தித்து,
சுயகாலில் நின்றால்..
போற்ற ஆள் 
இல்லாவிட்டாலும்..
தூற்ற வரிசை
கட்டுவர்!!
துயர் கண்டு 
உதவுவாரில்லை..
சிறு சந்தர்ப்பத்திலும் ..
அப்பெண்ணை 
வம்பு பேசி
இன்புறும் உலகம்

இளவரசியாக பிறந்து
ராணியாக வளர்த்து..
வேலைக்காரியாக…
மாற்றுவதே…
கல்யாணம் ..!!!

கண்ணை காக்க 
கண்ணாடி தந்தாய்!
முடங்காதிருக்க..
மூலிகை தைலம் தடவினாய்..!
என் உயிர் உன்னில் 
என்பதை மறந்ததேன் ..?????

பெரியார் வழி வந்த 
தந்தையின் மந்திரத்தை 
மறந்ததால்…
இன்று காயப்பட்டு
நிற்கிறேன்…!!!!

எண்ணங்களை
எல்லையின்றி
இறக்குவதால்
இளைப்பாறுகிறேன்
இரண்டு மணிநேரம்..!

ஏமாற்றுக்காரியாக 
இருப்பதைவிட..
ஏமாளி ……?
எவ்வளவோ மேல்….!
உரிமை உள்ள இடத்தில் 
ஏமாளியாவது….
உயிர் வலி…!!!!!!

ஆண் பிள்ளைகள் 
பெற்றால் …
போற்றும் சமுகம்…
வெற்றி பெறுவர் வாழ்வில்
பெண்பிள்ளைகள் 
பெற்றால் …
தூற்றும் சமுகம்….!
என்றும் அடிமை 
வாழ்க்கை….
தாய்மை 
மறுக்கப்பட்டால்…
வாழ்வே..
அர்த்தமற்ற….
விடை அறியா…
கேள்விக்குறி ஆக….!!!

நான் 
தோற்று….
உனக்கு 
வெற்றியை 
பரிசளித்திருக்கிறேன்..!!!

இப்ப 
திருப்தியா…?
இதற்கு தானே
ஆசைபட்டாய்..
பாலகுமாரா..!!!

ஒதுக்கும் சமுகத்தில்
மேலும்..
சகுனத்தடை ஆக்கி
சென்றதேன்..?
இவ்வளவு வன்மம்
கொள்ளும் அளவு..
செய்த
தப்பு தானென்ன..?
இருட்டுலகில்
வழி அறியாது…
திகைக்கும்…!!!!
விதி
பெயரிலேயே
பொன்னை 
வைத்துக் கொண்டு 
உரசி பார்ப்பதற்கு
(சோதனைகளுக்கு)
வருந்தி….
என்ன பயன்!!!!

என்ன நியாயம் 

கண்ணன் அழைத்தால்
கண்ணின் மணியை
மறந்தது…..என்ன
நியாயம்….?

கல்வி

மூன்றெழுத்தில்
என்
மூச்சிருக்கும்…

எதிர்நீச்சல்

காட்டாற்று வெள்ளமாய்
விதி இழுத்துச்செல்ல..
வாழ்க்கை என்னும்
கரை நோக்கி…
எதிர்நீச்சல்
போடுகிறேன்….

தண்டனை
வெளிப்படையாக
மனம் விட்டு 
பேசாத உறவு….
வாழும் வரை போராடு
படிக்க 
ஆசைப்பட்டேன்
நடக்கல
கல்யாணம் தான்…
என்றது விதி…
தாயாக
பத்து வருட போராட்டம்
இளவயதில் 
வேலை செய்ய 
ஆசைப்பட்டால்…
நடக்கல …
நாற்பது வயதில் 
உழைத்தால் தான் 
உணவு என்றானது…
கழுத்தை நெறிக்கும்
கடனும்….
கண்மணியின்
எதிர்காலம் தந்த
பலத்தில்…
விதியை எதிர்த்து
எதிர்நீச்சல் …
மீண்டும்,மீண்டும்
தொடரும்…
போடுகிறது விதி…
சக்தி
வசந்தமாய்
என் பிள்ளைகள்
வாடிய மலராய்
என் பொண்ணும்
என்னை இயக்கும்
உந்து சக்தி!!!!

இதுவும் கடந்து போகும்

ஆம்

கடந்து தான் போகிறது

காலம் மட்டுமே

உன்

நினைவுகள் அல்ல …..

நவீன சாவித்திரி

கள்ளப்பருந்து போல்
வந்து கவர்ந்து
சென்றானே …
இறைவனுக்கும் பயம்!!!!
சிறிது அவகாசம்
கொடுத்து இருந்தாலும்
அவனால் என்னவனை எடுத்து
செல்ல முடியாதென்று _
அவன் நன்கு அறிவான்

 

ஆச்சி போல
கதறவில்லை
என்கின்றனர்
நடிப்புக்கும்
நடப்புக்கும்
வேற்றுமை அறியா
விந்தை மனிதர்கள்

 

 தைரியசாலி
என்கின்றனர்
ஆம்
தைரியமாக
இருக்கிறேன்
ஆறுதல் சொல்ல
நீ
இல்லாததால்….

உன் கண்ணில் நீர் வழித்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுகிறது
என்றான் பாரதி….
கண் வரை எட்டா
உன் புன்னகை கண்டும்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுகிறதே….

விந்தை உலகம்

 பொய்யையும்,புரட்டையும்
எளிதில் நம்பும் உலகம்
வாய்மையையும்,நேர்மையையும் 
நம்புவதில்லை…
ருசு கேட்கிறது….

போராட்டம்

ஒவ்வொரு நாளையும்
கழிக்க
தினம் ஒரு
பட்ஜெட்
தாக்கல் 
செய்கிறேன்…!

சவாலே சமாளி

எத்தனை முறை ..
வீழ்த்தினாலும்…..
வீறு கொண்டு …
எழுவேன்
பீனிக்ஸ் பறவை போல..!!!
எத்தனை…!
எத்தனை…!
வேதனைகள்…!
சோதனைகள்…!
தந்து
அழவைத்து
பார்க்க எண்ணினால்
உனக்கு …
தோல்வியையே
பரிசளிப்பேன்…!! 
என்றும்…