சுவையான சமையல்

 

 

வண்டு கட்டி அவித்த முட்டைகிரேவி..

இது எங்க அய்யம்மையிடம் படித்தது.
எங்க அம்மா மட்டுமே எங்க வீட்டில் செய்வாங்க.
எங்கும் இது போல் கேட்டது கூட கிடையாது.
எங்க குடும்ப குழம்பு.சுவை அருமை அதை உங்களுடன் பகிர வந்துள்ளேன்.
எளிதானது தான்.

தேவையான பொருட்கள்.
முட்டை ஆறு.
வெங்காயம் கால் கிலோ.
தக்காளி நன்கு பழுத்ததா ஒரு ஐந்து அல்லது ஆறு 
காரக்குழம்பு மாசாலா இரண்டு தேக்கரண்டியளவு.
தேங்காய் அரை முடி.அரைத்துக் கொள்ளவும்.

முட்டைத் தயாரித்தல்.

முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து மிளகுத்தூள்,சீரகத் தூள்,
தேவையான் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் அதை ஒரு குழம்பு சட்டியில்,அடிப்பாகத்தில்  தண்ணீர் விட்டு ,
சட்டியின் வாய் பகுதியில் ,நல்ல வெள்ளை துணி கட்டிக் கொள்ள வேண்டும்.
அதன் மேல் இளம் வாழை இலையை தேவையான அளவு வெட்டி மேல் பரப்பவும்.
அதில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி, பின் ஒரு தட்டால் மூடி,மிதமான தீயில் வேக விடவும். 
வேக வைத்த முட்டையை ஒரு தட்டில் ,இலையைப் பிடித்து தூக்கி,ஒரு தட்டில் கொட்டி,சிறு துண்டுகள் போடவும். 

 

குழம்பு செய்யும் முறை.

சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விட்டு,உளுந்து ,வெங்காயம் போட்டு தாளிக்கணும்.
பின் எல்லா வெங்காயம் போட்டு பொன் நிறத்தில் வதக்கணும்.
பின் தக்காளி யை நன்கு எண்ணெய் கக்க வதக்கணும்.பின் மாசால் பொடி போட்டு வதக்கி,பின் அரைத்து வைத்த தேங்காய் ஊற்றிக் கொதிக்க விடவும்.கொதித்தப்பின்,வெட்டி வைத்த துண்டுகளை போட்டு,கொதிக்க விட்டு, கெட்டி ஆகவும்  இறக்கவும்.சுவையான முட்டை கிரேவி  தயார்.


சிறு துண்டுகளாக இருக்கும் முட்டை மசாலாவில் உப்பி,மாசாலாவுடன் இணைந்து………………. 

wow யம்மி யம்மி சுவை.

செய்து சாப்பிட்டு பாருங்களேன்.
அடித்த முட்டையை ,ஒரு பாத்திரத்தில் விட்டு மைக்ரோவ் அவனில் அவிக்கலாம்.
கொஞ்சம் சுவை இதைவிட மட்டுப்படும்.
தக்காளி,மாசால் பொடி அவரவர்கள் தேவைப் படி சேர்த்துக் கொள்ளலாம்.