நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே – ரேவதி அசோக்.

நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே – ரேவதி அசோக்.

நாயகன்- கௌஷிக்

நாயகி -பிரஷா

மூன்று கம்பனிகளில் வேலை பிடிக்காமல்,வேலையை விடும் பிரஷா ………….p .k க்ரூப்ஸ் கம்பனியில் தொல்லைகள் இல்லாமல் …வேலையில் ஐக்கியமாக ………………அப்ப என்ன வரும் …முதலாளி காதல் பண்றார்.இவள் மறுக்கிறாள்…………….விடாது முயல………….தன் வாழ்வின் அவலம் பகிர்கிறாள்.பின்னும் காதல் பெருக………. கௌஷிக் ……மீண்டும் முயல…………

திடிரென்று .வனவாசம் செல்கிறார் …..அதன் பின்னணி என்ன ………….பிரிந்த காதலர்கள் இணைந்தார்காளா ?என்று அறிய படியுங்கள் ரேவதி நாவல்.

ஆழகான காதல் கதை………..அதை சுவைபட தந்துள்ளார் ………..ரேவதி அவர்கள்.

சித்திரத்தை கண்டேனடி -கோதை நப்பின்னை

சித்திரத்தை கண்டேனடி -கோதை நப்பின்னை

நாயகன் -யுவராஜ்

நாயகி – ராஜநந்தினி

இருவரும் பணக்கார குடும்பத்தின் வாரிசுகள்.யுவா வின் பரம்பரை சொத்து ,நந்தினி தந்தையிடம் கஷ்ட காலத்தில் போய் விடுகிறது.அது உணர்வும் உயிருமானதாக கருதும் யுவராஜ் சொத்தை மீட்கும் வழியாக நந்தினியை மணக்கிறான்.வியாபாரத்திற்கு …….திருமணம்,காதல் தடை என்று என்பவன் ,நந்தினியிடம் காதல் வயப்படுவதும்……………அவளை காதலிக்க வைப்பதாக சாவல் விடுகிறான்.

சவாலில் வென்றானா ?சொத்தை உயிரா மதிக்க காரணம் என்ன என்பதை அழகான நடையில்,அதிக காதலுடன் தன் முதல் கதையை தந்து வெற்றி பெற்று யுள்ளார்.

எதார்த்தமான குடும்பம்,…………சுட்டி நாத்தினார்………….அமைதியான மாமியார் ,அசத்தல் பாட்டி

கலக்கல் பிரென்ட் மோகா ….ன்னு அழகிய பாத்திரங்கள்.

பார்த்த காதல்,சொல்லாத காதல்,பார்க்காத காதல் என எத்தனையோ பார்த்திட்டோம்……………….இது

பார்க்காமேலே கல்யாணம்………..ஆனால் அது காதலால் வெற்றி பெறுவது அருமை.

சுந்தரி நீயும் – ரமணிச்சந்திரன்

ஹாய் தோழிகளே.
சுந்தரி நீயும் – ரமணிச்சந்திரன்
கதாநாயகன் – சுதாங்கன்.
கதைச்சுருக்கம் :
மாதவன் ,பவானி தம்பதியரின் ஒரே மகன் சுதாங்கன்.அன்னை அழகான பேரக் குழந்தைகள் வேண்டி ,அழகான மருமகளை வீட்டளவில் பேசி முடிக்கின்றனர்.கல்யாணத்திற்கு முன் ,அந்தப் பெண் ரேவதியின் பேராசையை இனம் கண்டு திருமணத்தை நிறுத்த சொல்கிறான் தன் ற்றோரிடம்.
தந்தை சரியான காரணமின்றி நிறுத்த யோசிக்க,அப்பொழுது தன் தம்பி வெளிநாட்டுப் படிப்பிற்கு உதவும் சுதாவுக்காக ……………..காதலியாக நடிக்க ஒத்துக்கொள்கிறாள்.நம் ஹீரோஇன் மதிவதனி.அவள் உதவியால் கல்யாணத்தை நிறுத்தும் சுதா,அவளிடம் காதலில் வீழ்கிறார்.
அன்னையோ …முதலில் பேசிய பொண்ணுடன் சமாதனம் பேசி மணமுடிக்க எண்ணுகிறார்……….இருவரின் எண்ணத்தில் யார் வெற்றி பெற்றார்கள் ………..சுதாங்கன் யாரை மணந்தான்………….என அறிய படியுங்கள் இந்த மாத அழகிய மங்கையர் நாவல்.
ரேவதிக்கு செலவு செய்ததை சொல்லும்போது ………..நீ கஞ்சுஜ்ஸ்……….என்று கேலி செய்யும் பவானி மனதை நிறைக்கிறார்.
தமைக்கைக்காக ……..பாதுகாப்பு தந்து சுதாவுடன் கடுமையாக பேசும் பாலா…….நல்ல தம்பி.
நண்பனுக்காக மதிக்கு banபெங்களூரில் வேலை தரும் ராம் குமார் நல்ல நட்புக்கு எடுத்துக்காட்டு.
ஆனால் ஆழகான முடுச்சுக்களை இட்டு அதை அருமையாய் அவிழ்த்து ………….சுதாவை தன் இணையுடன் இணைக்கும் ரமணி அம்மாவின் இனிமையான எழுத்துக்கு ஒரு salute.
என்றும் இளமை மாற ………..rc அம்மாவின் எழுத்து நடை தமிழ் கதை உலகின் வரமே.

மழை விழும் மலர்வனம்.- தமிழ் நிவேதா.

மழை விழும் மலர்வனம்.- தமிழ் நிவேதா.
கதாநாயகன் – முகிலன்,சிபி
கதாநாயகி – வர்ஷினி.
அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ,மணமகன் பார்க்காமல்,பேசாமல் திருமண ஏற்பாடு நடக்கிறது.முந்தைய நாள் வழக்கம்போல் மாப்பிள்ளை வரல.விபத்து என்று சொன்னாலும் ,பெண் வீட்டார் ஏற்க மறுக்க ………..கல்யாணம் நிற்கிறது.பையனின் தந்தை மாற்று மாப்பிள்ளையாக அக்கா மகனை காட்ட ……….இருதரப்பிலும் விருப்பம் இல்லாததால் …………பெண் வீட்டார் வெளியேறுகின்றனர்.

வர்ஷினி மனமாறுதலுக்காக கல்வராயன் மலைக்கு ,தன் குருவுடன் ஆசிரிய பணிக்கு செல்கிறாள்.அங்கே மலைக்குடி மக்களுடன் தன் துன்பம் மறக்கிறாள்.அங்கே விருந்தினர் விடுதி கட்ட வருகிறார் சிபி.அவனின் பழக்கம் மனசலனத்தை தர ,இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ள,வில்லியாய் வரும் வர்ஷினி காய்ச்சல் ,இருவரும் பிரிக்கிறது.வர்ஷினி முகவரி தெரியாமல் திண்டாடும் சிபி,மாமன் மகனின் வருங்கால மனைவி யாக வர்ஷினி இருக்கிறாள்.
அதிர்ச்சி யுறும் சிபி ………..தன் காதலியை மணந்தானா?
வர்ஷினி தன்னைப்பற்றி மறைத்தது ஏன் ?
என்ற விவரம் அறிய படியுங்கள்.
இந்த மாத பெண்மணி நாவல்.