இதயக் கதவு.- இன்பா அலோசியஸ்

இதயக் கதவு.- இன்பா அலோசியஸ்
கதாநாயகன் – தருண் யாதவ்
கதாநாயகி – லாவண்யா .
இன்பா விடமிருந்து ஒரு வித்தியாசமான கதை களம் இந்தக் கதை.
கனவு தொழிற்சாலை.அங்கு உள்ள சில நல்லது,கெட்டதுகளை தன் பாணியில் சுவைபட ,நமக்கு விருந்து ஆக்கி இருக்கிறாங்க.
கதாநாயகர்கள் இருவரும்,வித்தியாசமானவர்கள்.
தருண் வெற்றிப்பட நாயகன்.ஆனால் அவன் கதாநாயகிகளின் அரண்.கிடைப்பதோ………….கெட்ட பேர்.பத்திரிகை உலகில் கிசுகிசுவில் சிக்கி சிதறும் போது………அவன் பற்றிய அபிப்பிராயம் வேற.கோவக்காரன்……அகம்பாவி …….ஆனால் ……….உண்மை?
லாவண்யா ஒரு கதாநாயகியின் பின்பு உள்ள துயர்களையும்,குணங்களையும் பிரதிபலிக்கிறாள்.திறமை இருந்தாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை.அழகான பேர் இன்பா சொல்றாங்களே கைப்பாவை பொருத்தமான பேரே.காதலை மனதிலும்.கடமையை அறிவிலும் சுமந்து ,ரெண்டுக்கும் இடையில் உணர்வு போராட்டம் கொள்வதை…….சுவைபடச் சொல்லி இருக்கிறார் இன்பா.
தெய்வா ஒரு தோற்றுப் போன நடிகை ,தன் கனவை தன் மகள் மூலமா அடைய முயல்வது….பணத்தாசை கொண்ட நடிகையின் அம்மா வாக அருமையான பாத்திரப்படைப்பு.இன்பா ஹட்ஸ் off .
கண்மணி கதையின் மூல வேர்.விஸ்வம் ஒரு மானேஜர் படும் திண்டாட்டத்தையும் ………..புலம்பலும் சூப்பர்.இவன் நம் காதல் மன்னியின் …சிறப்பு பாத்திரம்.அய்யா பூந்து விளையாடுறார்.
விவி சிறந்த பத்திரிகைகாரி.லயா வின் தோழியாகவும் ………….nice.
அப்பா ……….தருண்……….ஒரு அரசனிற்கு இருக்கும் நேர்த்தியுடன் கண்மணி,விவி,லயா வை காப்பதிலும்………………fantastic.
ஷெட்டியை மொரிசியஸ் படப்பிடிப்பு செல்ல விடாமல் தடுப்பதாகட்டும்,லயா தானா சிந்திக்க செய்வது……காத்திருப்பதுன்னு…………சூப்பர்.
ஒரு மர்மக்கதை படிப்பது போல்………..எதிர்பாரா திருப்பங்களுடன்………..
அழகான சுவையான கதை.
ஒரேயொரு குறை எனக்கு தோன்றியது ………..யஸ்வந்த் சொல்லும் dirty கிஸ் மட்டும் …………………….சுவைதான் ……..ஆனாலும்………அதை தவிர்த்து இருக்கலாம்.
கனவு தொழிற்சாலை பற்றி ………….இன்பா வரிகள்.
நம் அனைவருக்கும் தவறாகத் தெரியும் விஷயம் அங்கே கொண்டாப்படுவதும்,பெரிய கதாநாயகனை வளைக்க ஒரு ஆயுதமாகவும் பயன்படுவது விந்தை.அங்கே நியாயம்,அநியாயம்.கற்பு என்னும் விஷயங்கள் எல்லாம் சில நேரம் கேலியாகவும்,பைத்தியக்காரத்தனமாகவும் தெரியும்.
இதிலேயே நான் clean bold.பின் அவங்க எழுத்து நடையிலும்,கதைக் களத்திலும் ……………..எங்கே எழுந்திருக்க………..அவங்க அடிக்கும் சிக்சர்,பௌண்டரி யில் ………..ஒரு சூப்பர் மேட்ச்.
ஒரு வெற்றிவிழா கொண்டாடிய படம் பார்த்த feeling ………….
மொத்தத்தில் …………நன்றி இன்பா………..ஆவலுடன் அடுத்தக் கதைக்கு காத்து இருக்கிறோம் மறந்துடாதீங்க.சீக்கிரம் வாங்க.

என்னுள்ளே பூங்காற்றாய் நீ.- ரேவதி அசோக்.

என்னுள்ளே பூங்காற்றாய் நீ.- ரேவதி அசோக்.

கதாநாயகன் ஹரீஷ்
கதாநாயகி – மௌனிகா.

மௌனிகா -அன்னை,தந்தை இல்லா பெண்.தாய் மாமன் சக்கரவர்த்தியின் கண்ணின் மணி.காதல் ,கல்யாணம் மேல் நம்பிக்கை இல்லாதவள்.இவளை பார்த்ததும் காதலில் விழும் ,சக்ரவர்த்தியின் நண்பர் பையன் ஹரீஷ்.வெற்றிகரமான தொழில் அதிபன்.ஹரீஷ் அவளை தானே காதலிக்க வைக்க தன் வீட்டில் தங்கி வேலை செய்ய ,தன் அலுவல் உள் அலங்கார வேலையை அளிக்கிறான்.அப்பிடியே அவள் மனதிலும் இடம் பிடிக்கிறான்.என்னடா………….ட்விஸ்ட் …..வில்லி இல்லைன்னு நினைக்குறீங்கள ?

மௌனியின் உயிர் தோழி சாராவும் ஹரீஷ்யே காதலித்து அதற்கு தூதாக மௌனியையே அனுப்புகிறாள். தோழிக்காக ஹரீஷ்டம் பேசத் தொடங்கும் மௌனியை அவள் மனதை புரிய வைத்து வெற்றி பெறுகிறான்.ஹரீஷ் சாராவை சரியாய் கணித்து தான் ஹீரோன்னு நிரூபிக்கிறான்.

தோழி ன்னு சொல்வது தப்பு சாராவை.நல்ல மகள் இல்லை.நல்ல தொழிலாளி இல்லை.தோழியும் இல்லை.இப்ப உள்ள சுயநல பெண்களை பிரதிபலிக்கிறாள்.அவள் துரோகம் மற்றும் தீய செயலில் இருந்து மௌனி எப்பிடி தப்பிக்கிறாள்……….?..கெட்டதின் பலன் இப்ப எல்லாம் உடனே கைமேல …சாராவின் நிலை அறிய படியுங்கள் ரேவதி அசோகின் என்னுள்ளே பூங்காற்றாய் நீ………. .

அனல் மேல் பனித்துளி ரம்யா.

அனல் மேல் பனித்துளி ரம்யா.

ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முயற்சியில் நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ரம்யா.
இந்தக்கதையிலும் தன் முத்திரை பதிக்கிறார்.

செல்,நெட் என உலகத்தை நம் கையில் வைத்து இருக்கும்போது………..இன்னும் தொலைதொடர்பு இல்லா
பழங்குடி மக்களின் வாழ்வை நம் கண் முன் கொடுத்துள்ளார்.போக்குவரத்து வசதி இல்லா மலைக்கிராமம்.
அங்கே படித்து வெளிநாடு செல்லும் திவாகரன் தன் கிராமத்தையும்,தன் மக்களின் நம்பிக்கையையும் தன் ப்ளாக்கில் பதிகிறான்.அதை படிக்கும் அவன் வெள்ளைக்கார தோழன் ஈர்க்கப்பட்டு,கிராமத்திற்கு வரும் ரொனால்டோ ……….
கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து,தொலைதொடர்பு ,போக்குவரத்து,கல்வி வசதிகள் செய்து கொடுத்து,
கிராமத்து பைங்கிளியை தன் சொந்தாமாக்கி கொள்கிறான்.

கிராம மக்கள்,போதை கும்பல்களால் பெண்களுக்கும்,தங்கள் உடைமை களுக்கும் வரும் ஆபத்துக்களை எப்பிடி எதிர் கொள்கிறார்கள் என்பதே கதைக்களம்.சாமியாடி,குறி சொல்வது,ஊர்க்கட்டுப்பாடு…………….என மலைக்கிராமத்தை நம் கண் முன் நிறுத்துகிறார்.

ஜோதி,ரோன்,
திவாகரன் ,செல்வா,
கண்ணழகி.,கருப்பசாமி,
வீரத்திய்யன்,பஞ்சமத்தி,கொடிவஞ்சி
பரமசிவன் ,வைஷ்ணவி …………..
அப்புறம் நம் காளிகோவில் என எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.

திடிர் திடீர் என்று பெண்கள் துன்பப்படுவதும்,மறுநாள் கொலையும்,ஜோதியின் காய்ச்சல் என………..மர்மம் பிளஸ் ……………இங்க்லீஷ் காதல் என சுவாரசியத்திற்கு குறைவு இல்லை.
ரோன் தமிழில் பேசுவதும்,நம் ஜோதி இங்கிலீஷ்ல அவனைத் திட்டுவதும் highlight.

காதலுக்கு வாய்மொழி தேவை இல்லை……………என்பதை நம் ஹீரோ,ஹீரோயன் நிரூபிக்கிறார்கள்.
ராமாயணமும்,அண்ணலும் நோக்கினார்…………அவளும் நோக்கினார்……..

அய்யன் திருவள்ளுவனும் சொன்னதை…………….
கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

அழகா தன் பாணியில் மனதில் பதித்து இருக்கிறார் ரம்யா.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ………
காத்திருப்பேன் என்று தெரியாதோ.

கண்ணும் கண்ணும் நோக்கியா …………….
கொள்ளை கொள்ளும் மா. .பியா……………….

ஊஞ்சலாடும் உறவுகள். அமுதவல்லி கல்யாண சுந்தரம்.

ஊஞ்சலாடும் உறவுகள். அமுதவல்லி கல்யாண சுந்தரம்.

கதாநாயகன் ரவீந்திரன்.
கதாநாயகி ஷோபா.
சொத்துக்காக நண்பன் மற்றும் பார்ட்டனர் கதாநாயகியின் அப்பாவை விபத்தில் சாகடித்து விட்டு,தான் மகனுக்கு அவளை மணமுடித்து சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார்…நம் வில்லன் கிருஷ்ணா.

அப்பிடியெல்லாம் ……விட்டுடுவாங்களா…..நம் அம்மு மேடம்.

ஷோபாக்கு பிடிக்கல என்பதற்காக ,ரவியை ஆடிட்டரா நியமித்து தனக்குத்தானே ……சுயம் ஆப்பு வைத்து …..சொத்து மட்டுமல்லாமல் ,பொண்ணையும் அவனிடம் இழக்கிறார்.
அப்பா ராமகிருஷ்ணன் அம்மா கோமதி,
அண்ணன் நரேந்திரன் அம்மாவாகிய அண்ணி மாலினி.இவங்க சுட்டி விக்னேஷ்.
பாசமான தங்கை கீர்த்தனா.இது ரவியின் உற்சாகமான உறவுகள்.

இங்கே தனியாகவும்,பணக்காரி……….. கணக்கில்லா சொத்தும் கொண்ட குழந்தைஉள்ளம்,குமரிப்பெண் ஷோபா.
அன்னை தந்தையை தீடிர் விபத்தில் இழந்து,தன் கம்பனிக்கு ஆடிட்டராக வரும் ரவி மேல் காதலும்,கல்யாணமும் உடனே செய்யும் நம் அதிரடி ராணி ஷோபா.எதிலும் பங்கு போட்டு பழக்கமில்லாத நம் நாயகி,ரவியின் அன்பை பங்கு போட விரும்பாமல் ஊஞ்சலாடும் உள்ளத்துடன் குடும்பத்தில் இணைந்து,பின் அவர்கள் பாச வெள்ளத்தில் மூழ்கி முத்தெடுக்கிறாள்.

கிருஷ்ணன்,அப்பா தருண் மகன் ரெண்டு பேரும் காமெடி வில்லன்கள்.ஷோபாவின் பெற்றோரை சொத்துக்காக விபத்தில் சாகடித்த பார்ட்னர் கிருஷ்ணா.அவளின் கார்டியன்.இவர்களை முழுமையா நம்பும் வெள்ளை உள்ளம் ஷோபா
.சமையல்காரி வேங்கடம்மா……… .சமையல்காரி வேங்கடம்மா…………இவர்கள் சுயம் தெரிந்து ஷோபிக்காக பிரார்த்திக்கும் நல் உள்ளம் ,உறவாக போற்றப்படுவது அழகு .ரவியின் நல்ல friend.

கிருஷ்ணா ………..தன் மகனுக்கு ஷோபாவை மணமுடிக்க போடும் திட்டங்கள்,ரவிக்கு சாதகமாகி கல்யாணத்தில் முடியுது.
ஷோபாக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவே ஆடிட்டரை தேர்ந்து (ரவியை)தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்வது சூப்பர்.

தன் கோவத்தால் நிரந்தரமாக வேலையில் நிறகாதவன்……………..அதிரடி ராணியை சந்தித்த வுடன் ,தன் கோவத்தை விட்டு,ஷோபாக்கு அரணாய் மாறுவது …………..அழகு. குழ்நதை மனைவியை தன் அழகான குடும்பக் கூட்டினுள் இணைக்கும் பாலம் அவன்.
எனக்கு தருண் சொதப்பும் ,கிருஷ்ணாவின் திட்டம் பார்க்கும்போது பழைய நம்பியார் ……………அவர் கையைப் பிசைவது,………..கோவப்படுற காட்சி என் மனக்கண்ணில் தோன்றுவதை தடுக்க முடியலை.remba enjoy panninen.
படிக்காதவங்க படிங்க friends.
எங்கள் அதிரடி ராணி,
பெயரில் அழகு,
அதிரடி அழகு.
கோவம் அழகு.
ஓரக்கத்தி மேல்
பொறாமை அழகு.
குட்டி கூட போடும்
போட்டியும் அழகு.
கிருஷ்ணா கை பொம்மையா
யோசிப்பதிலும் அழகு,
வேங்கட்டம்மா அறிவுரை கேட்பதிலும் அழகு,
கணவனிடம் பார்க்கும் ஈகோ வும் அழகு.
தன் தவறு உணர்வதிலும் அழகு.
வடகம்,பரிசு என பார்சல் பண்ணுவதும் அழகு.
விக்னேசு கூட போடும் இரகசிய டீளும் அழகு.
மாமியார்க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததும் அழகு.
ரவி யின் சீண்டலில்,
ஜூனியர் பட்டம் ஒர்கத்திக்கு கொடுத்ததும் அழகு.
sub ஜூனியர் பட்டம் நாத்தினாருக்கு கொடுத்ததும் அழகு.
கணவன் மட்டுமல்ல அவள் குடும்பத்தில் எல்லோருக்கும் 143
சொன்ன ஷோபி பேரில் மட்டும் அழகல்ல.
அவள் பிப்டி kg அழகுப் பெட்டகம்.
இவ்வளவு அழகா ஷோபி யை படைத்த எங்க அம்மு வும் பேரழகு.

என்னை ஆளும் உறவே – பிரேமா

ஹாய் friends,

என்னை ஆளும் உறவே – பிரேமா

கதாநாயகன் – ஜெயந்த்

கதாநாயகி – பிரீத்தி

கோவிலில் கல்யாணம் பண்ணும்போது கூட்டத்தில் பொண்ணுக்குப் பதில் கோவிலில்

சாமி கும்பிட வந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் நம் ஹீரோ.

engineer பொண்ணு வேண்டாம்,வேலைக்குப் போகும் பொண்ணு வேண்டாம் என சொல்லும் ஜெயந்த்

தாலி கட்டிய பொண்ணு ,சாப்ட்வேர் enginner.இவரோ படிப்பிலும் B .COM ,சாதாரண கிளார்க் வேலை.

இருவரிடையே மஞ்சு கயிறு மேஜிக் வேலை செய்ததா …………?

ப்ரித்தி அக்கா சுபத்ரா …எப்பவும் தேள் கொடுக்கா………. கொட்டுவாள்.அவள் தங்கையையும் ,அவள்கணவனையும் ……..வேலை,சம்பளம் என தரக்குறைவாக பேச………..கோவிக்கும் மனைவியை எப்பிடிசமாதன படுத்தினான்………எவ்வாறு மதினியார்………..வாயைத் தன் செயலால் எப்பிடி அடைத்தான் என்று அறிய ……….? காதலே பிடிக்காத நம் ஹீரோ எப்பிடி காதல் கடலில் தொபக்கடிர் ன்னு……..வீழ்கிறார்னு …….அறிய ……….படியுங்கள் பிரேமா கதை.

அப்பா ………நம் ட்விஸ்ட் களின் ராணி …….full form ல திரும்பி இருக்கிறார்.

கல்யாணத்தில் ட்விஸ்ட்.

காதல் பிடிக்காதுன்னு……………. ட்விஸ்ட் .

வேலையில் ட்விஸ்ட்.

தலைப்பிலும் கூட ஒரு ட்விஸ்ட் ஒழிந்து இருக்கே…………

சூப்பர் பிரேமா

அதிலும் ஜெயந்த் ……….வாய் நம் மேகியை விடப் பெரிசு.

அவன் கடலை வறு ப்பதிலும் நம் நுடுல்ஸ் யை தோற்கடித்து விட்டான்.

அசத்தல் கதை படிங்க friends.