கொலைதூர பயணம் – எண்டமுரி வீரேந்திரநாத் .

கொலைதூர பயணம் – எண்டமுரி வீரேந்திரநாத் .

இது ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம்வாய்ந்த கதை.
கதாநாயகன் – ரஜினி.
கதாநாயகி – அனுஷா
எண்பதுகளில் வந்த கதை .
மும்பை மாபியாக்களை பற்றிய கதை.

இப்ப இருக்கும் பங்கு சந்தை நிறுவனத்தில் பொது மேலாளர் பதவி நேர்காணலுக்கு வரும் கதாநாயகி ….அனுஷா அங்கே புகழ்பெற்ற புகையிலை நிறுவனர் சிபாரிசில் வந்து இருக்கும் போட்டியாளரை சமாளிக்க ,தன் அண்ணன் வீட்டில் இருக்கும் சமையல் காரனின் பல்குரல் திறமையை பயன் படுத்த …….நட்டமோ ……….அதிபருக்கு ……..அவர் உடனே இவளை பழி வாங்க நிழல் உலக தாதா வசந்த்யை அணுகுகிறார்.

அவன் தன் வலதுகை தென்னாட்டு சங்கரை அனுப்ப,அவனோ பெண் பித்தன் ……..அவனிடமிருந்து பார் வைத்து நடத்தும் ரஜினி நம்ம ஹீரோ காப்பாற்றுவார்.பில்வன் ஹீரோவின் வலது கை

காப்பாற்றும் போது தாதா பின்னால் இருப்பதை சொல்ல ,இவள் தாதாவை எதிர்ப்பாள்.தைரியம் இருந்தும் நமக்கேன் வம்புன்னு ஒதுங்கும் ரஜினியை சீண்டி விட ………அவனும் களத்தில் குதிப்பான்

சங்கர் ஒரு வெளிநாட்டுப் பயணியை கெடுத்து கொல்ல .ஜப்பான் பயணி என்பதால் …….அவனுக்கு தண்டனை கிடைத்து அங்கே அனுப்ப முயற்சி பண்ண ,அதற்குப் பதிலாக ஒரு அப்பாவியை பிடித்து மாற்றி அனுப்ப முயற்சி செய்ய ,அவன் கடைசியில் மரண பயத்தில் தப்பித்து விட ,அவன் தாதாவை பற்றிய தகவலை ஒரு கடிதம் எழுத,அதை ஒரு அப்பாவி வத்சலா மாட்ட ………….ரஜினியும் ,அனுஷாவும் கதையில் தாதாவை தோற்கடிக்கிறாங்க.

அனுஷா புத்திசாலித்தனம் துணிச்சலும் கொண்ட பெண்.
வத்சலா ..யாதர்த்தமான பொண்ணு நம்மை போல் …வெளி உலக அறிவற்று,சின்ன சின்ன விஷயங்களில் சந்தோசம் அடையும் ….இயல்பு கொண்டவள்.அனுஷாவை பார்த்து பிரமிப்பாள்………

அனுஷாவின் அண்ணன் டெல்லி போலீஸ் அதிகாரி IG.
அவளும் ,ரஜினியும் சேர்ந்து தாதா கண்ணைக் கட்டி சங்கரை கொன்று அந்த பழியையும் தாதா மேலேயே போடுவாங்க.

வத்சலாக்கு ..இந்த லவ் எனும் கவர்ச்சியில் இருந்தும் வெளிக்கொண்டு வருவாள் அனுஷா.

ஒரு crime கதை சினிமா பார்த்தாற் போல இருக்கும்.அழகான கதை நான் முன்பே தொடரா படித்தேன் ….பின் புத்தகமாக வாங்கி வைத்தேன் .அடிக்கடி படிப்பேன் ……..இன்று தர்ஷி கேட்டதால் ..விமர்சனம் போட்டேன்.

ஆனால் நான் பாதி கூட சொல்லல ………சொல்லவும் முடியாது …….நிறைய விஷயங்கள் கொண்ட கதை கிடைத்தால் படிங்க …………ரஜினியிடம் இருக்கும் ஒரு ட்விஸ்ட்

உருவம் தானே இரண்டு – ரமணிசந்திரன்

ஹாய் friends,

இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் friends.

உருவம் தானே இரண்டு – ரமணிசந்திரன்

கார்த்திகேயன் ,தாமரையின் செல்ல மகன் சுபானந்தன்.
தொழிலில் புலியான கார்த்திகேயன் தன் மகன் ஒரு பொண்ணுடன் சுற்றுவது தெரியவும் தம்பியை கண்காணிக்க சொல்கிறார்.
வழக்கம்போல் தன் பங்கு பணத்தை சூதில் தொலைத்து ,அண்ணன் அண்ணி தயவில் ஜீவிக்கும் ராஜதுரை …அண்ணன் மகனை பின் தொடருகிறார்.

சுபானந்தன் வசதியான குடும்ப வாரிசு.சாருப்ய்யா சிறுவயதிலேயே தந்தையின்றி தாயின் உழைப்பிலும் ,உபகார சம்பளத்திலும் படித்து வளர்ந்தவள்.அவள் தாயிடம் தன் காதலை நிருபிக்க ,என் வாழ்வில் சாரூ தவிர வேறு பெண்ணுக்கு இடமில்லை என்று சத்தியம் செய்கிறான்.
இதை அறிந்த ராஜதுரை …..கல்யாணத்தை நிறுத்துதல் ,அல்லது சாருவை மிரட்டி ஊரை விட்டு ஓடச் செய்தால் ,சொத்து நம் பரம்பரைக்கு ஆகிவிடும் என தப்புக்கணக்கு போட்டு அண்ணன் ,அண்ணியை குழப்பி,சாரு தாயையும் ஒழுக்கமற்றவராக நம்ப வைக்கிறார்.

அவர் சூதில் இருந்து தப்பி இருவரும் மணம் முடித்து,காஷ்மீர் வேலை பிளஸ் தேன்நிலவாக போன இடத்தில் பனிச்சரிவு விபத்தில் மாட்டி சுய நினைவு இழக்கிறார் சுபானந்தன்.சிகிச்சை பணம் வேண்டி சுபானந்தன் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கிறார் சாரு .ஆனால் சாருவை அவர் தேடுவது கண்டு விருப்பமின்றி தன் வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர்.

அங்கே சுபானந்தன் எப்பிடி நினைவு வருது?

ராஜதுரை சூழ்ச்சியை சுபானந்தன் எப்பிடி கண்டுபிடித்தான் ?

தன் பெற்றோர் சாருவின் மீது கொண்ட தப்பு எண்ணம் எப்பிடி விலகியது அறிய ………….படியுங்கள்.

வழக்கமான rc கதை.மோசமில்லை.

பனித்துளி சுடுவது ஏனோ ? – ராஜஷியாமளா

பனித்துளி சுடுவது ஏனோ ? – ராஜஷியாமளா

திரிநேத்ரா தன் தாயின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு வேண்டி குன்னூரில் வேலைக்குவருகிறாள் …….அங்கே முதலாளி அம்மா ஜானகியம்மா ………சிரித்த முகமும் ……வசதியிலும் எளிமையானவர்.பார்த்தவுடன் இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுக்குது ……..

அப்ப வில்லன் ……….நம்ம ஹீரோ தான் குருராஜ் .ஜானகியம்மா வின் பையன் ……….அவனை சந்திக்கவும் இருவருமே அதிர்கிறார்கள் ……..முறைத்துக் கொள்கிறான் ……ஆனாலும் அம்மாவின் சிபாரிசில் வேலைக்கு அமர்த்த படுகிறாள்.அவன் குழந்தையின் கார்டியனாக ……….அவள் அம்மாக்கும் ராஜ வைத்தியமும் நடக்கிறது.

ஆனாலும் தேள் போல கொட்டிக் கொண்டே இருக்கிறான்……….துணிந்து கேட்கிறாள் .ஏன் இப்படின்னு …….அதற்குள் குழந்தை விழிக்க ………முன் கதையில் தடை …………

அவன் டெல்லி போக ……….இங்கே அம்மா அவன் முதல் மனைவி …பிள்ளை பிறந்த பின் தன்னுடன் படித்தவனுடன் …….வெளியேறி இருக்கிறாள் ………விவாகரத்து ஆகிறது………அவன் தந்தை உடம்பு சரியில்லாத பொழுது அவர் ஆசையை நிறைவேற்ற நடந்த உறவுக்குள் நடந்த கல்யாணம் மாமன் பொண்ணு.

என் மகன் விரும்பின பொண்ணும் வேற பையன் கூட வாயில் ஊட்டுவது போல போட்டோ அவன் நண்பன் அனுப்ப்பினான் ……..என்றும் சொல்ல ……..அது உண்மை அல்ல என்று தன்னை மீறி .கத்தி விடுகிறாள் நேத்ரா………..

குருவும் ,நேத்ராவும் …….குரு படிக்கும்போதே காதலர்கள்.அவன் தன் பெரியம்மாவின் வீட்டில் தங்கி படிக்கும்போது,அண்ணன் பையனை சத்தம் போட்ட ……B.ed ட்ரைனிங் டீச்சர்………அண்ணன் மகனுக்காக வந்து மூக்கு உடை படுகிறான் சந்தோசமாக …….பின் அவளை சந்திக்க ……home tuition என்ற பேரில் வீட்டுக்கு வர வைக்கிறான் …இவன் வசதி கண்டு தயங்க …….அவன் விடாது …..மனதை மாற்றுகிறான் …….திடீரென்று கல்யாண பத்திரிக்கை …வந்து குழம்பி போகிறாள்.

டெல்லி சென்ற அவனும் தோழன் முலமே ……அந்த வாயில் ஊட்டியவன் …….அவள் ஒன்றுவிட்ட அண்ணன் என தெரிந்தே …..திரும்புகிறான்……….தன் தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய ….அதிக சம்பளத்தில் ……..புகழ்பெற்ற ஊட்டி பள்ளியில் ஆசிரியர் வேலையும் வாங்கி தந்து கிளம்ப சொல்கிறான் ………..ஜானகியம்மா ………இந்த குழப்படி கண்டு …..ஒன்றும் செய்ய முடியவில்லை……..

பையை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடி ஆகும் போது ……அவள் பொருட்களுடன் …..இன்னும் ஒரு சாப்பாட்டு கூடையும்,சிறிய பையும் ….என்ன என்றால் …..நானும் நேத்ராம்மா கூட போயிட்டு வாரேன் ….டூ days தான் …வந்துடுவேன்னு அவன் பொண்ணு மனோவும் கிளம்புகிறாள் ……….பின்ன என்ன ….சுபம் தான் ….ஜானகியம்மா ரெண்டு பேரையும் ஒரு அரட்டில் வழிக்குக் கொண்டு வருகிறார்……

இவங்க கதாநாயகிக்கு ஒரு செல்ல பேர் சொல்றாங்கப்பா ….ஆள் மயக்கின்னு …………அது பொருத்தம் தான் ……நம்மையும் மயக்கிடுறாங்க ……..

அதிகம் பேசாட்டலும் …..பசக்குன்னு மனதில் ஒட்டிக்கிறா ……..அந்த குட்டி ….மனோ ……….

கனவு மெய்ப்பட வேண்டும். – ராஜஷியாமளா.

கனவு மெய்ப்பட வேண்டும். – ராஜஷியாமளா.

இந்த கதையை உமாமனோஜ் தான் பரிந்துரைத்தார்கள்.முதலில் நன்றி அவர்களுக்கு.
படகு கார்,ஆடம்பர வாழ்வு,அல்ட்ரா மாடர்ன் கதாநாயகிகள் என்று படித்து விட்டு ……..நீண்ட நாள் கழித்து …ஒரு மத்தியத்தரக் குடும்ப கதை.ரெம்ப பிடித்தது.

ஹரி அப்பா சாதாரன வாத்தியார் ஒரு பொண்ணு ,ரெண்டு பையன் என்று நிறைவான வாழ்க்கை…..பொண்ணை படிக்க வைக்க எண்ண …மாப்பிளை வீடு பெண் கேட்டு ..ஒண்ணும் வேண்டாம் .வேண்டாம் என்றே .அவரை கடனாளி ஆக்கி ……நெஞ்சுவலியில் ….போய் சேர்கிறார்………மூத்தவன் ஹரி மேல் விழுகிறது .

குடும்ப பாரம் சுமக்கும் .யாதர்த்த ஹீரோ.
ஒண்டு குடித்தனம்,அக்காள் கணவரின் தவாறன நடத்தையால்,கணவனைப் பிரிந்து ரெண்டு குழந்தையுடன் இவன் வீட்டில் தஞ்சம் அடைகிறாள் துளசி ………உன் வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டம் ……இங்கே என்ன குறை ….வீட்டு சாப்பாடு போரடித்தால் வெரைட்டி தேடுவதில் என்ன தவறு என்று கேட்கும் …..துளசி புருசனிடம் ………இதையே பெண்களும் நினைத்தால் என்று ……..தன் கஷ்ட ஜீவன வாழ்வில் ……ஹரி great.

கஷ்டப்பட்டு முதல் மார்க் எடுத்தும் படிக்கும் தம்பி குடும்ப பாரத்தில் தோள் கொடுப்பான் என்று நினைக்க ,……..அவனோ பணக்கார பெண்ணின் காதலில் விழுந்து,தோல்வியில் புத்தி பிரண்டு .அவன் கஷ்டம் கூடுகிறது……….

குருவின் காதலி சுஜா ….இன்றைய நவநாகரீக பணக்கார பெண்.காதல் என்று இவன் பின்னால் சுற்றுகிறாள் …..இதை அறிந்த அவள் தந்தை விரதம் என்னும் பேரில் குரு வீட்டு வாழ்வினை அவள் ஒரு வாரம் வாழ வைக்கிறார் .பின் மறு வாரம் சுவிஸ் கூட்டிச் சென்று,தன் நண்பன் வீட்டில் தங்க வைத்து அவர் பையன் ………….இப்ப உள்ள ஹீரோ போல் படகு கார்……. மட்டுமல்ல கப்பலே வச்சு இருக்கும் வருணை மாப்பிளையாக சொல்லி,ரெண்டு வாழ்வில் எது வேண்டும் ?என்று மகளை .எளிதா காதலில் இருந்து மீட்டு விடுகிறார்……நல்ல அப்பா.

சுற்றிலும் கஷ்டத்திலும் …..அவன் வாழ்வில் இனிமையாக வருகிறாள் வனிதா …வங்கியில் வேலை செய்கிறாள்.நல்ல பொறுப்பான பெண்.

ஹரி அம்மாவின் தேவகி மகன் காதலை எதிர்த்து …….சொந்த பொண்ணை எடுக்க முயற்சி செய்து …..தோல்வி அடைகிறார்…துளசி அம்மாட்ட பேசுவது அருமை …அம்மா மனம் மாறினாலும் ,கல்யாணத்துக்கு சம்மதிக்கும் அவர்,கல்யாணத்தில் பங்கேற்க மறுக்கிறார்………..வனியையும் வார்த்தையால் தாக்க……அடங்கியும் போகாமல் ,அதற்காக எதிர்த்தும் பேசாமல் அவர் வார்த்தையில் இருந்தே count down வனிதா பாரதி கண்ட புதுமை பெண்.

கொழ்ந்தனை மீட்டு,நாத்தினாருக்கும் சொந்த காலில் நிற்க வழி சொல்லி கொடுத்தும்,சொந்த வீடும் வாங்கி விடுகிறாள் ….பின் என்ன மாமி மனதையும் வென்று விடுகிறாள்…..

பக்கத்தில் வீட்டில் நாம் பார்ப்பது போல் உள்ள கதை ……

இதயம் எழுதிய கவிதை – இந்திரா நந்தன்

ஹாய் friends,

இதயம் எழுதிய கவிதை – இந்திரா நந்தன்.

மரகதம்,மாணிக்கவேல் தம்பதியரின் மகன் ஜெய்.
மாணிக்கவேலின் தங்கை கோகிலாவின் மகள் மேகலா …
தங்கை கோகிலாவும்,அவள் கணவர் சுப்பையாவும் மேகலா சிறு வயதிலேயே விபத்தில் இறக்க ….மாமன் வீட்டில் வளர்கிறாள்.
தங்கையின் சேமிப்பு ,நகை வைத்து வியாபரம் செய்து திருப்பூரில் பெரிய மில் ஓனர் ஆகிறார்.பெரியவர்கள் மகனுக்கு முடிக்க எண்ணி,சொல்லி வளர்க்கிறார்கள் …….மேகியும் ஆசையை வளர்க்க ……….

ஜெய் வழக்கம்போல் பணக்காரன் ,பெரிய தொழில் அதிபன் ,மேகலா வோ நல்லா சமைப்பாள்,கோலம் போடுவாள் ….நுனி நாக்கு ஆங்கிலம் தெரியாது …..அப்ப என்ன ஆகும் ?அய்யா …….நாகரீக பெண்மணியிடம் காதலில் விழுகிறார் ……..மேகலாவை மணக்க மறுக்க …தந்தையிடம்
சண்டையிட்டு வீட்டையை விட்டு வெளியேறி காதலி வீட்டில் தஞ்சம் புகுகிறார் .தந்தையோ சொத்தின் முதலாளி மேகலா என்று அவள் பெயரில் எழுதி கொடுத்து விடுகிறார்.

மேகலா துன்பத்தில் இருந்து வெளிவர கோவில் செல்லும்போது ,சேலையில் தீப்பிடிக்க உதவும் அம்மாவுடன் அவர்கள் வீட்டுக்கு செல்ல அவர்கள் மகன் பாடகர் ….மேடை கச்சேரியில் பாடும் அவரை ,தொலைக்காட்சி போட்டிக்கு அனுப்பி நம்பிக்கையை ஊட்டி அனுப்ப …..அவனும் திரையில் பிரபலாமகிறான் .

பின் என்ன ஆகும் ,பணமில்லாத ஜெய் யை மணக்க மறுக்கிறாள் ..
இவர் மீண்டும் அன்னை,மேகலா முலம் ………திருப்பூர் ஆபீஸ்க்கு வேலைக்கு செல்கிறார்.பின் என்ன அத்தை மகள் மேல் காதல் பிறக்குது.தந்தை மட்டும் வீட்டிற்கு கூப்பிடல ….அவர் மனமாற காத்து இருக்கிறான் .

அவர் வீட்டிற்கு அழைத்தாரா ?
மேகலாவின் அன்பு மீண்டும் கிடைத்ததா ………?

இந்த கதாசிரியரை பாராட்டியே ஆகணும்ப்பா ……..எல்லோரும் போல ………மீண்டும் அவனிடம் போகாமல் ..வேறு துணை நாடுவது போல் முடித்து இருக்கிறார்கள் …….. சூப்பர்.

இந்த …..உலகத்தில் இல்லா சிறப்பு பெற்ற ஹீரோக்கள் எல்லோரும் முகத்திலும் அடித்தது போல் ஒரு சந்தோசம் வருது பாருங்க ………..

இதுவும் புத்தகம் தான் no link friends சாரி.
இன்னும் மூன்று கதை இருக்கு …….இதே புத்தகத்தில் ..வாரேன் அதன் விமர்சனத்துடன்

வைகறை வெளிச்சம் – திருமதி லாவண்யா

ஹாய் friends,

வைகறை வெளிச்சம் – திருமதி லாவண்யா

பிரியா ,காவ்யா பெண்களின் பிரத்தியேக துணிக்கடை ,
ஆடைகளும்,அணிகலன்கள் வடிவமைப்பாளர்கள்.
பிரியா .ஓரளவு வசதியான குடும்பம்.அதே காம்ப்ளெக்ஸ் லில் வேலை செய்யும் மனோ ..காதல் சொல்ல,தன் தந்தையிடம் பேச சொல்கிறாள்.

தந்தையிடம் பேச வீடு வரும் மனோ வின் கணக்கிடுகள் …..வசதி அவனுக்கு திருப்தி அளிக்குது.குடும்ப விவரங்கள் கேட்டு செல்கிறான்.இங்கே பிரியா தந்தை தொழிலில் நொடிக்க ,மாரடைப்பு ஏற்பட்டு பிழைக்க,உறவினர்முத்துசாமி பணஉதவி செய்வதாகவும் பதிலுக்கு தன் குடிகார மகனை மணந்து திருத்தணும் …….கடனை ஏற்பதாக சொல்கிறார்……இங்கே மனோ வோ ……இவர்கள்
நொடித்தவுடன் அமெரிக்கா சென்று விடுகிறான்.

விருப்பமின்றி பிரியா கல்யானத்திருக்கு சம்மதித்தாலும் தந்தையுடன் கோவத்தில் பேச மறுக்கிறார்.இறுதி வரை பேசாது போகும் அவர் தன் நிலையை கடிதமா எழுதி புரிய வைக்கிறார்.

பாலா வோ அப்பா மேல் உள்ள கோவத்தில் குடிகாரனகிறார் …..அவரை சீண்டியே …குடிக்க விடாமல் செய்கிறாள் …இருவரும் டோம் and ஜெர்ரி யா ….சண்டையிட்டே …….காதலில் விழ்கின்றனர்.
சந்தேகத்தில் மீண்டும் பிரிகின்றனர்…………?

சூர்யா ,அஞ்சலி மற்றொரு ஜோடி ………வேகமாக காரில் சென்று விபத்து,ஏற்பட்டு உயிருக்கு போராடும் அஞ்சலியை காப்பற்றும் சூர்யா ……..விபத்தில் கர்ப்ப பையை இழக்கும் அஞ்சலி ……..அவனை கடித்து குதறுகிறாள் …….மனைவியை சமாதன படுத்த முடியாமல் தவிக்கும்போது ,அவனுக்கு வரமா வருகிறாள் சங்கீதா ,தென்றல்……..

சங்கீதா ராஜ்குமார் ….அவர்கள் பொண்ணு தென்றல் …..அஞ்சலியை மாற்ற,……சங்கீதாவே இவர்கள் நிலை புரிந்து ,வாடகை தாயாக இருந்து இனிமை பிறக்கிறாள் ……..அவர்கள் வாழ்விலும் மாற்றம் வருகிறது………

பாலா ……ஏன் குடிகாரனாகிறான்?அப்பா மேல் என்ன கோவம் ……?

பிரியா அவனை திருத்தினாளா ………?

மனோ என்ன ஆனான்?

அஞ்சலி ஏன் ..சூர்யாவிடம் கடிக்கிறாள் ? அஞ்சலியின் மனமாற்றம் அடைவாளா ?இவர்கள் வாழ்வில் வசந்தம் பூக்குமா ?என்பதை அறிய

மிக அருமையான கதை ……..லாவண்யாவின் வைகறை வெளிச்சம் படியுங்கள் ………

தோழிகளே நான் புத்தகத்தில் படித்தேன் .no link.

புது புத்தகம் இது.

அது துன்பமான இன்பமானது – காஞ்சனா ஜெயதிலகர்.

அது துன்பமான இன்பமானது – காஞ்சனா ஜெயதிலகர்.

கதாநாயகன் – பிரகாஷ்
கதாநாயகி – பொன் ஒளிர்.

பிரகாஷ் இளம் தொழில் அதிபன்.சிறு வயதிலேயே சாதித்தவன்.
ஆனால் பணம் வரும்போது ஒட்டிக்கொள்ளும் விபாஷிணியிடம் மயங்கி மணம் புரிய எண்ணி வுள்ளான் .ஆனால் விபத்தில் கண் போய் விடுகிறது.கண்ணும் போய்…………..மனசுக்கு பிடித்த பொண்ணும் போய் ……………கடும்மன பாதிப்பு அடைகிறான் .

இவனுக்கு வீட்டில் நர்ஸ் ஆக பணி புரிய வருபவள் பொன்னி.
அவள் அவன் மனதையும்,உடலையும் சரி பண்ணி ,பழைய மாதிரி மாற்று கிறாள்.
அப்புறம் என்ன ……..காதலும் வருது……

வில்லன் …….இவன் விபத்துக்கு பின் உதவ வரும் சுரேஷ் உபத்திரமாக மாற ……அதையும் எப்பிடி சமாளிக்கிறான் ….

கதை என்னவோ சாதரணமாக தான் இருக்கும்………ஆனால் சொன்ன விதம் …..she is great.
மங்களூர் பற்றி அவ்வளவு தகவல்கள்,
அழகான பலரின் quote க்கள் என சூப்பர்.

ரெம்ப நாள் கழித்து …..காஞ்சனா கதை படித்த சந்தோசம் உங்களிடம் பகிர வந்துட்டேன்.

மங்கையர் உலகம் எனும் புத்தகத்தில் படித்தேன் friends.

பொய் சில நேரங்களில் அழகானது – முத்துலட்சுமி ராகவன்.

ஹாய் friends,

பொய் சில நேரங்களில் அழகானது – முத்துலட்சுமி ராகவன்.

கதாநாயகன் – மோகன்.
கதாநாயகி – சுசரிதா.
அருமையான தோழன்- அன்பழகன்.
அன்பு தங்கை – மாளவிகா.

வாய் சவாடல்,மஷ்க்கா போடுதல் ,கடலை போடுதல் என எல்லாம் சிறப்பும் கொண்டவன் ….மோகன்.அவன் ஹீரோ .
இவனைப் பார்த்தவுடன் எடைபோடும் புத்திசாலி ஹீரோஇன் ……..
ஆனாலும் அவனிடமே காதலில் வீழ்கிறாள் .அவன் குணத்தை வைத்து காதலை சொல்ல ,ஏற்க தயங்க …………கல்யாணம் செய்து காதலை தொடருகிறார்.ஹீரோ.

இதில் தென்றல் போல உள்ள சுகமான காதல் அன்பழகனோடது.
குணத்திலும்,நடத்தையிலும் ரியல் ஹீரோ இவன் தான்.
காதலியின் கடிதத்தை தந்தையிடமே கொடுத்து என்ன இருக்கு ன்னு கேட்கிற அப்பாவி…………
இதில் மாளவிகாவின் கோவத்தையும் அமைதியாக எதிர்கொள்ளும்போது மனதை அள்ளுகிறான்
.

அவனுமே நேர்மை பேசும்போது காதலில் வெற்றி பெற முடியவில்லை.
பொய்யின் குத்தகை காரன் மனைவியே……….தகிடத்தனம் பண்ணி
அவன் காதலை ஜெயிக்க வைக்கிறாள் சுசி.

வழக்கம்போல் mr கதை.
உமா சொன்னது போல் அழகான காட்சி அமைப்பில் மார்க்கை அள்ளிடுறாங்க ………….

மனசை வருத்திய விஷயம்.

மாமா பொண்ணு,அத்தை பொண்ணு என்றாலே வழிதல் தானா?
சகோதர பாசம் போல் ………..அதிலும் ஒரு கண்ணியமான உறவு உண்டு.அது அனுபவிக்கிரவங்களுக்கே புரியும் ……..