உப்புக் காற்றினில் உன் சுவாசம் – தமிழ் நிவேதா .

ஹாய் friends,
உப்புக் காற்றினில் உன் சுவாசம் – தமிழ் நிவேதா .

கப்பல் வாழ்க்கை பற்றிய கதை.
கடல் பயணம் பற்றிய அரிய தகவல்கள் .
ஹிதேஷ் கப்பலின் தலைமை பொறியாளர்.கண்டிப்பும் ,திறைமையான வழி நடத்தலும் கொண்டவன்.
மெர்ஷ்க் எம்மா எனும் சரக்கு கப்பல் தான் கதைக்களம்.
கேப்டன் கேப்ரியல் இரக்கம்மும் ,தட்டிக்கொடுத்து வழிநடத்தும் தலைவன்.கடலையும் ,கப்பலையும் தன் வாழ்வாதாரமாக கொண்டவர்.

இவரது சிஷ்யன் ஹிதேஷ் ..இரண்டாதராமான இவன் அம்மா ,முத்ததார பையனை நன்கு வளர்த்தாலும் சமுகத்தால் வளர்ந்த பின் ,பிரிந்து சொத்து இன்றி விரட்டப்பட்டு வறுமையில் மகனையும் வளர்த்து வேலைக்கு அனுப்பிய பின் இறைவனடி சேர ……..கடல் அன்னையை தன் தாயாகவே சுவீகரிக்கிறான்.

புதிதாக வேலைக்கு சேர்ந்த அசோக் அர்விந்த்,உன்னிகிருஷ்ணன் .தாமஸ்,நாரிமேன் ,பிலிப் ,சிரில் ………..சக engineers .

லண்டனில் அம்மா அப்பா அண்ணனின் கண்ணின் மணியாய் இருக்கும் ரோஜனா விமான விபத்தில் பெற்றோரை பலி கொடுக்க,காதல் தொந்தரவு தரும் சக மாணவனை காரால் மோதி தப்பிக்க ,கொலைகுற்றம் வர ,கள்ள கப்பலேறி அபிரகாம் எனும் நண்பன் உதவியில் நாடு விட்டு தப்பிக்கிறாள்.

இங்கே ஹிதேஷ் கப்பலில் இருக்க,கண்டுபிடிக்கும் கேப்டன் அவளை ஹிதேஷ் கேர்ள்பிரண்ட் ,வருங்கால மனைவி ,மனைவி என படிப்படியாக பதவி உயர்த்தி விடுகிறார்.

கடல் பயண சிரமங்கள் ,வேடிக்கைகள்,கடல் கொள்ளை.
என திரில் நிறைந்த வித்தியாசமான கதை.தகவல்களும் கொட்டி கிடக்கு.
தென்னாப்பிரிக்காவின் நிலை.பசிக்கு சோறு இல்லா நிலை ,உரிய வசதியற்ற மருத்துவமனை என மற்றொரு உலகை காட்டுகிறார்.அப்பா ………இப்ப தெரியுது நாம் எப்படி சொகுசாக வாழ்கிறோம் என்று.

இதில் மெல்லிய காதல் ,செண்டிமெண்ட் ,முதலில் வேலைக்குப் போகும் ஒவ்வொரு கப்பல் பணியாளரும் இனி இந்த வேலைக்கு வரமாட்டேன்னு புலம்புவது ………

கப்பல் விபத்து ,புயல்,சுழற்சி ,மாசுக்கட்டுபாடு குறைபாடுகள் ………..என ஒரு சூப்பர் கதை.

சுகமுடிவு தான் friends .தைரியமாக படிக்கலாம்.
சாரி friends no link .

இன்னிசை தேவதையே – அமுதவல்லி கல்யாணசுந்தரம்.

இன்னிசை தேவதையே – அமுதவல்லி கல்யாணசுந்தரம்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு செல்லும் முன் தான் தேர்வு நுழைவுச்சீட்டினை முருகன் சன்னிதியில் வைத்து வணங்க ,அது முன்பு வந்த பணிநியமன கடிதத்துடன் போய் விடுகிறது.அதனால் பதறி அழுகும் பொண்ணை சமாதானபடுத்தி,தைரியம் சொல்லி ,பள்ளியிலே நகல் பெறலாம் னு உதவுகிறார் ஒரு பெரியவர்.

அதற்கு முன்பே ,நண்பன் அனுப்பினான் என்று ,அந்த நுழைவுச்சீட்டு அவளுக்கு முன் பள்ளியில் கொடுக்கிறான் ஒருவன்.

சிக்னலில் ஓடும் காரில் பிரசவ வேதனையில் துடிக்கும் பொண்ணை சரியாக மருத்துவமனையில் சேர்க்கும் பெண்மணி .

டெல்லியில் இருண்ட சாலையில் கார் break down ஆகி நிற்க ,வழியில் செல்லும் வேறு காரில் செல்லும் நபர் தமிழ் குரல் கேட்டு ஒரு மெக்கானிக் அனுப்பவதும்,மெக்கானிக்கு பணம் ஆயிரம் கொடுத்தே அனுப்புகிறார்.

முதல் வருடம் கல்லூரி செல்லும் சங்கீதாவை ராக்கிங் ல இருந்து காப்பாற்றும் ராகவன் ,படிப்பு முடியும் நாள் அன்று தன் காதலைச்சொல்ல ,லண்டன் செல்லும் முன் பதில் வேண்டும் மூன்று நாளில் வருகிறேன் என்று சொல்லி சென்றவன் ஆள் அட்ரஸ் இல்லாமல் மறைகிறான்.

கணவனை இழந்த ஜானகி அம்மா ,இரட்டை குழந்தைகளை வைத்துக்கொண்டு ,பொட்டிக் நடத்தும் பெண்ணின் வீட்டில் செய்யும் சிறு சிறு உதவிகளை ,வக்கற்று வேலை பார்த்து சாப்பிடுற என்ற வம்பின் பேச்சில் கோவித்து மகன் வீட்டுக்கு செல்கிறார்.

பெங்களூரில் இருக்கும் மகனின் காதலித்து மணந்த கிருஸ்த்தவ மருமகளுடன் ,கிருஷ்ண ஜெயந்தி பலகாரத்தை,சாமி கும்பிடும் முன் தவறாக வினயோகம் செயதத்ற்காக கோவித்து பெரிய மகன் வீட்டுக்கு செல்கிறார்.

அண்ணன் மகள் மாலினி ,முத்த மருமகள் என்றாலும் கூட அங்கே தன் டீன் ஏஜ் பேரப்பிள்ளைகள் உடன் பொருந்த முடியாமல் வழக்கிட்டு ……..வாழ்க்கை வெறுத்து ,இளைய மகன் வெளிநாட்டில் இருக்க,போக இடமில்லாத இயலாமையில் தற்கொலை முயற்சி செய்கிறார்.

அப்பொழுது காப்பாற்றி பாதுகாக்கும் இல்லத்துக்கு தன் தந்தை பிறந்த நாள் கொண்டாட வரும் சங்கீதா,தெரிந்த முகமாக இருக்கே என்று பேச்சுக் கொடுக்க,பத்திரிகையில் இவர் காணாத விளம்பரம் கண்டு,நயமாவும் கண்டிப்பாகவும் பேசி அவர் அறிவுக்கண்ணை திறக்கிறார்.இதில் தெளியும் ஜானகி அவளையே தன் இளைய மருமகளாக ஆக்க ஏற்பாடு செய்கிறார்.

ராகவனை நினைத்து கல்யாணத்தை மறுக்கும் சங்கீதா…………
நல்ல குணம் கொண்ட சங்கீதாவை தன் இளைய மகனுக்கே கட்டுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஜானகி அம்மா ………

இதில் ராகவன் கிடைத்தானா ……….?ஏன் தலைமறைவானான் …….?ஜானகியம்மா ஆசை நிறைவேறியதா ………..?
சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் யார் யார் ………..எப்பிடி எல்லோரும் இணைந்தார்கள் …………?என்று அறிய ……….அம்மு mam கதை படிங்க விடை கிடைக்கும் .

நம்நாட்டு திருமணங்கள் இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல…இரு குடும்பங்களின் சங்கமம்.
குடும்ப பிரச்னைகளை மனம் விட்டு பேசினால் தீர்வு கிடைக்கும் ,மகிழ்ச்சிக்கும் குறைவில்லை எனும் கருத்தை சொல்லும் கதை.

என்றும் மகிழ்வுடன் – புகழ் பெற்று வரும் பிரேமாவின் பத்தாவது நாவல்.

என்றும் மகிழ்வுடன் – புகழ் பெற்று வரும் பிரேமாவின் பத்தாவது நாவல்.

கதாநாயகன் – வினய்
கதாநாயகி – ஹரிணி.

ரேணுகா கணவரை இழந்து ,வினய் ,மனோஜ் எனும் மக்களை தனித்தே வளர்த்தவர்.வினய் தம்பியையும் ,அன்னையும் தன் வாழ்வாய் கொண்டவன்.அவர்களைப் பிரிய மன்மில்லாமல் IIT படிப்பை தூக்கி எறிந்தவன்.இன்று தன் உழைப்பில் ஒரு புது அப்பார்ட்மெண்ட் ல் வீடு வாங்கி அன்னையை குடியேற்றியவன் .வேலை விஷயாமாக இந்த முறை மட்டுமே போவேன் என்று சிங்கப்பூர் செல்லும் அவன் அங்கே ஹரிணியின் காதலில் விழ்கிறான்.

சிங்கப்பூர் செல்லும்போது தவறாக பெண்ணிடம் நடந்ததாக கூட்டம் கூட்டி அவமான படுத்துகிறார் பாண்டியன்.அவரை தன் வாழ் நாளில் சந்திக்கவே கூடாது ன்னு சவால் விட்டு செல்கிறான் .அவர் ஹரிணியின் அத்தையின் கணவர் ,தான் பிளாட் க்கு அருகில் இருக்கிறார் என்று அறிகிறான்.காதலும் ,அவமானமும் போட்டி போட இறுதியில் காதல் வெல்கிறது .

கல்யாணத்துக்கு பின்னும் அவருடன் மோதல் தொடர்கிறது.அவர் வீட்டிக்கு போகாமல் ,ஹரிணி போவதையும் தடுக்கிறான்.அது தம்பதியர் இடையே பிணக்காகி முட்டல்கள் ,காதல் என்று போகிறது.

மனோஜ்,வினய் புரிதல் கதையின் பிளஸ்.அண்ணனை அடிக்கும் அம்மாவிடமே பேசமால் இருக்கும் அளவு அவன் பாசம் சூப்பர்.அத்துடன் இசை ஞானம் கொண்ட அவன் ,புகழ்பெற்ற பாட்டு போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறுகிறான் .அதில் வரும் தடங்கல்களை தாண்ட அறிவுரை சொல்லும் அண்ணியை அம்மா என்று கூப்பிட்டு ……..wow……what a writing ?

பாண்டியனின் மனைவி அபிராமி ,ஹரிணி தன் மாமியாரை ரேனும்மா ன்னு சொல்லும்போது ,தன்னை அம்மா என்று அழைக்க யாருமில்லை என்று வருந்த ,மனோஜ் அவரை அம்மா என்று அழைக்கிறான்.அதை கண்டும் மகிழும் ரேணுகா…

மனோஜ் குறும்பும்,மலரிடம் செய்யும் வம்பும்,அண்ணி,அம்மா விடம் தன் அண்ணனுக்காக பேசும் இடமும் சூப்பர்.விழாவில் தன் அண்ணனை அப்பா என்று அழைப்பது ………..சூப்பர்.

மனோஜ் ஜின் காதலி பிளஸ் அவர்கள் சிறுவயது தோழி மலர் .
டாக்டர் அவளும் அக்குடும்பத்தில் ஒருவராகவே வளருகிறாள்.
நட்பு,காதல்,பாசம் குறும்பு என்று ஒன்றையும் விடல பிரேமா .ட்விஸ்ட் களின் ராணி ட்விஸ்ட் யும் விடல ,ஆனால் பாதியில் நமக்கு தெரிந்து விடுது..

எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் வினய் ஏன் பாண்டியன் மேல் மட்டும் கோவம் ?,அவரை மன்னித்து சமாதானமாவானா ………என்று அறிய படியுங்கள் பிரேமா கதை.

பிரேமா முடியல ,ஐயோ எதைச்சொல்ல ,எதைவிட………..
சூப்பர் டுப்பர் கதை.நன்றி.

என் கவிதைகள்

இணையம் எனும் கடலில் 
திசை அறியா படகாய் 
தத்தளித்தேன் ….
வந்தாய் கலங்கரை விளக்காய்…
வழிகாட்டினாய்
ஆசானாக …
அன்பாக தட்டி கொடுத்து,
நட்பாக …
பங்கேற்று…
அரவணைத்தாய்
மூத்த சகோதரியாய்
அமுதாய் 
பொழிந்த என் 
அமிர்தே…
நீ வாழிய ….
பல்லாண்டுகள் .