உன்னைப் பார்த்திருந்தேன் – பிந்து வினோத்

பார்த்திபன் ,கோதை எனும் வரலாற்று நாயகர்கள்
பிரதாப் கீர்த்தனா இன்றைய நாயகர்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபாடும்,கல்யாணம் அதற்கு தடை எனும் எண்ணம் கொண்டவன்.கீர்த்தனா விபத்தில் பெற்றோரை இழந்தவள் ,இப்ப பத்திரிகையில் வேலை செய்யும் அவள் கனவால் பாதிக்கப்பட்டு குழம்பிய நிலையில் …….புதையல் கிடைத்த செய்தி சேகரிக்க மதுரை செல்கிறாள். வேற எங்கே …………?ஹீரோ வீட்டில்தான்,அவனும் இவளிடம் காதலில் விழுகிறான் ……….இதில் அந்த புதையலை மாற்றி கடத்தும் கூட்டம் வெங்கடேஷ் ,வேல்முருகன் கண்ணபிரான் தேவா இதில் பாழடைந்த ….சிவன் கோவில் அதை புதுப்பித்தல் என ………அதற்கு கடத்தல் கூட்டம் மூலமே பணம் என அழகாக கோர்த்து இருக்கிறார்.

இந்த கதையை பற்றி விரிவாக எனக்கு சொல்ல தெரியல ……… உணர முடியுது.பெரிய சாண்டில்யன் ,கல்கி கதை போல வராலாற்று பின்னணி மட்டும் கொண்ட கதை இல்லை என்றாலும் ……அந்த புதையல்,சுரங்கம் ,சமண மடம் ,சிவன் கோவில் என நம்மை சேர,பாண்டிய நாட்டிற்கு நம்மையும் கூட்டி சென்று எழுத்து மூலமே நம்மை வென்று விட்டார்..சமுக நாவலில் சிறிய வரலாற்றையும் இணைத்து சுவைபட கொடுத்து உள்ளார் பிந்து.

அந்த லொட லொட அபூர்வாவும் மனதைக் கொள்ளை கொள்கிறாள்.
அழகாக புதையல் நாணயங்களை கடத்தும் அவர்கள் ……..தாங்களே தங்களுக்கு வினையாகிறார்க்கள் …….அவர்கள் தாங்களாகவே பணத்தை சிவன்கோவில் திருப்பணிக்கு அளிக்க செய்த…….நேர்த்தி அந்த சிவனின் திருவிளையாடல் ஆகவே உணர முடிந்தது ……..வித்தியாசமான முயற்சியில் பிந்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

 

ஆகாயத் தாமரை – மாலா கஸ்தூரிரங்கன்

ஹாய் friends,

பொங்கல் வாழ்த்துகள் தோழமைகளே .

வந்துட்டேன் மாலா கதையோட
ஆகாயத் தாமரை – மாலா கஸ்தூரிரங்கன்

கதாநாயகன் – ஸ்ரீவத்சன்
கதாநாயகி – செந்தாமரை
நம் லேடி பாலசந்தர் ………மாலாவோட சிறப்பே திரைக்கதை …..இதிலும் நிறைய இடங்கள் ரசிக்க முடியுது.

ஸ்ரீகாந்தன் ,ஸ்ரீவத்சன் ,ஸ்ரீனி என மூன்று சிங்ககளின் பெற்றோர் மாதங்கி ,ரவிச்சந்திரன் ………இவர்களின் ஏதோ தவறால் மணவாழ்வு தோற்றுப் போய் ,அவர்கள் மேல் உள்ள கோவத்தில் யாரிடமும் பேசாது இறுக்கமாக இருக்கும் ஸ்ரீவத்சன் ……..தம்பியிடம் மட்டும் கொஞ்சம் இணக்கம் உண்டு…….மீண்டும் திருமணம் செய்ய வலியுறுத்த ……….அவனோ மறுத்து வரும் நிலையில் ,

ஸ்ரீனி தன் தோழி செந்தாமரைக்கு உதவி செய்யும் பொருட்டே மருத்துவனாக லட்சியம் கொள்கிறான்.அவன் குஷ்பூ வை காதலிப்பதை வத்சவ் ட்ட சொல்கிறான்.

செந்தாமரை சின்னசாமியின் இரண்டாவது மனைவியின் மகள் …….அதனால் தன் பெரியன்னையின் (கங்கை ) கொடுமைக்கு ஆளாகிறாள் ……மேலும் பெரியன்னையின் மருமகன் கண்ணும் அவள் மேல் விழ ………..அதற்கு ஏற்ப செந்தாமரை அக்கா பூவரசியும் இரண்டாவது பிரசவத்தில் இறக்கிறாள் ……..இரு குழந்தைகளும் பெண்ணாக போக இதை சாக்கு வைத்தே ,அவளை மணமுடிக்க ஊர் பஞ்சாயத்தை கூட்டு கிறான் …….அறியும் ஸ்ரீனி அதை தடுக்க தான் மணமுடிக்க எண்ண ………..தம்பியின் காதல் அறிந்த ஸ்ரீவத்சன் தானே தாலி கட்டி விடுகிறான்.

அதிரிச்சியில் ,அவளை ஏற்க முடியாமல் திண்டாடும் ஸ்ரீவத்சன்,கணவனையே முதலாளியாக எண்ணும் செந்தாமரை ,இவர்களை இணைக்க மாதங்கியும் ,ஸ்ரீனியும் கூட்டு ……வைக்க ……
லேடி பாலசந்தர் மாலாவின் கலக்கல் திரைக்கதை காரணமாக ……….கதை சும்மா அதிருது ………

செந்தாமரையின் அறியாமை,அவள் தமிழும் ……….சிரிப்பு என்றால் ,
அவள் ஏக்கமும்,சகிப்புத்தன்மை,உணர்வுகள் மிகவும் மனதை வருத்துகிறது ……..

பூவரசி மூத்த மகள் திரிஷா ,இளையவள் தந்தை ,மற்றும் கங்கையால் ஒதுக்கப்பட்ட சின்னு வுக்கு தாயாக இருக்கும் அவள்,ஸ்ரீவத்சன் ஒதுக்கம் கண்டு வருந்தி ………ஒதுங்குவதும்,என நம் அனுதாபத்தை அள்ளி செல்கிறாள் .

ஸ்ரீனி ,மாதங்கியின் திட்டப்படி ஸ்ரீவத்சன் தன் மனைவியுடன் சேர்வதும்,அந்த குழந்தைகளை ஏற்பதும் கவிதைபோல அழகாக சொல்லி இருக்காங்க.

நம் தேசிய மலர் சோடை போகுமா ?
தமிழர் திருநாளில் நல்ல கதை தந்த மாலாக்கு ஒரு hats off

மையல் கொண்டேனடி – பிரேமா

மையல் கொண்டேனடி – பிரேமா

கதாநாயகன் – ராகவ்
கதாநாயகி – நித்திலா
.

தன் பொண்ணின் தோழிகளுடன் செல்லும் அவள் ஆசையை நிறைவேற்ற தன் மனைவியை ஏமாற்றும் ராஜதுரை ……..அண்ணன் மேலே உள்ள பாசத்தால் அவள் வாழ்வில் வில்லனாக மாறும் கதை.
சேதுபதி பூங்கோதையின் அன்பு மகன் ராகவ் க்கும் ,ராஜதுரை சரோஜினியின் செல்ல மகள் நித்திலாக்கும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயக்கிறாங்க ……அவன் ஜெர்மனில் வேலை பார்க்க ,அங்கு செல்ல வசதியாக பதிவுத்திருமணம் செய்து விட்டு ,ஊர் அறிய மணமுடிக்க காத்திருக்கும் மணமக்கள் ………..வில்லங்கம் பெரிப்பா உருவத்தில் வருகிறது .

ராஜதுரையின் அண்ணன்வில்லங்க வஜ்ரவேலு வினால் …….வீண் வாதம் பிரச்னையாக உருமாறி ,இறுதியில் கல்யாணம் நிற்கிறது.ஈகோ பிரச்னையில் சம்பந்தியின் சமாதன முயற்சி தோற்கிறது ………..தன் மகளை இனி ராகவ் கூட பேசக்கூடாது ன்னு சத்தியம் வாங்குகிறார்.அம்மிணியும் ……..சத்தியத்தை அச்சு பிசகாமல் பின்பற்ற ……….அயல்நாட்டு வேலையை விட்டு ,அவள் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து ,மேலதிகாரி தங்கை கல்யாணம் என்று கூட்டி சென்று ,ராகவ் தாலி கட்டி விடுகிறார் .

கல்யாணம் முடியவும்,கோவத்தில் மகளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் ……….கோவத்துடன் புருஷன் வீடு செல்லும் அங்கே தனி சமையல் ………என சத்தியாக்கிரகம் செய்கிறாள் .

விரைத்துக் கொண்டு திரியும் மனைவியை எப்பிடி சமாதன படுத்துகிறான் ……….மாமனார் கோவம் தணிந்ததா ………?எப்பிடி .?
அழகாக இளமை மாற ,இனிமையாக சொல்லி இருக்காங்க பிரேமா.

பொதுவாக வீட்டுக்கு இப்படி ஒரு ஏமாளி பாசக்கார அண்ணன் அல்லது தம்பி ராஜதுரை போல இருப்பாங்க …….அவங்களால் பாதிக்கப்படும் அவர் மனைவியும் மக்களும் பற்றிய கதை ……….கதையில் திருந்திடுவாங்க …….உண்மையில் கடினம் ………பாவம் அந்த பிள்ளைகள் …

உறவுப் பூக்கள் உதிர்வதில்லை – அமுதவல்லி கல்யாணசுந்தரம்

உறவுப் பூக்கள் உதிர்வதில்லை – அமுதவல்லி கல்யாணசுந்தரம்

கதாநாயகன் – ராஜேஷ்
கதாநாயகி – நித்யா

நம் கதாசிரியர்கள் பசுமை,வேளாண்மை என தங்கள் கதைக்களமாக வைத்து,நாம் நம் வருங்கால சந்ததினர்க்கு செய்ய வேண்டிய கடமையை வலியுறுத்தும் கதை.

முந்தய கதையிலேயே சீதா விவசாயத்தை சொல்லி இருந்தாங்க அதற்குப் புத்தகம் வரட்டும் ………ஆனால் இப்ப

ஆணாதிக்க உணர்வு அதிகமுள்ள ராமனாதன்,தன் மனைவி சியாமளா மற்றும் பெண்கள் ,திவ்யா ,நித்யா எல்லோரையும் வார்த்தையாலேயே வலிக்க அடிக்கிறார்.அப்படியே தன் பிள்ளைகள் பேரில் இவர் குணமறிந்து மாமனார் எழுதி வைத்த சொத்தை விற்று தனக்கு வருவாய்க்கு வழி செய்கிறார்.

இந்த சொத்து கிராமத்தில் மாந்தோப்பு ,பண்ணைகள் அழிக்கப்பட்டு இந்த நிலசுவான்தர்கள் கையில் கிடைக்கிறது ,முத்தவள் சொத்தை விற்று விடுகிறார் ………இளையவள் பங்கை விற்க முயலும்போது
மாயக்கிருஷ்ணன் எனும் பள்ளி ஆசிரியர் எதிர்க்கிறார் …….முடியாத பட்சத்தில் தன் மகன் ராஜேஷ் கிட்ட ஒப்படைக்கிறார் ……..அய்யா காதலோடு பொண்ணு,மற்றும் சொத்தை காப்பாற்றுகிறார்.

தன் தந்தையின் ஆணைப்படி ,ஊரில் அழிக்கப்பட்ட மரங்களை பள்ளி சிறுவர்கள் வைத்து உருவாக்குகிறான் ……

இதில் திவ்யா மருத்துவருக்கு படிக்க ஆசைப்பட ,பொண்ணு என்று செலவழிக்க யோசித்து படிக்க வைக்கல ராமனாதன் .செவிலியர் படிப்பு படிக்கும் அவள் ,கல்யாணம் ,காதல்………அழகான கவிதை .

இப்ப நாம் விழித்துக்கொண்டு இயற்கையை போற்றி காப்பாற்ற வேண்டிய நம் கடமையை ………..அழகிய தேன் கலந்த மருந்தாக கொடுத்து இருக்காங்க ….

எங்கிருந்தோ வந்தான் – பிரேமா

ஹாய் friends,

எங்கிருந்தோ வந்தான் – பிரேமா

கதாநாயகன் – சஞ்சய்
கதாநாயகி – சாருமதி.


பரந்தாமன் ,ஈஸ்வரி தம்பதிகளின் மகள் சாரு ,பொறியியல் படித்தாலும்,கணவன் சம்மதித்தால் வேலைக்குப் போனா போதும் என்று விடுகிறார். பெண் பார்க்கும் படலத்துடன் துவங்கும் கதை,பிரேமா வின் வழக்கமானகலாட்டா மற்றும் துள்ளலுடன் ஆரம்பிக்கும் கதை இறுதி வரை சுவாரசியம் குறையாமல் செல்கிறது.

பெண் பார்க்கும் போதே அவனை சங்கேத மொழியில் VKKL கலாய்க்கும் சாரு ,மாறுவேடம் போட்டு சாருவை கலாய்க்க நினைத்து மாமியார் வரை பல்ப் வாங்கும் சஞ்சய் …….ஆஹா ……..கலக்கல்.

சாருவின் கர்ப்பத்தை சொல்லாமலே உணரும்,சஞ்சயும் அவன் அன்னை கோமளமும் கண்டுபிடிப்பது அழகு.சாரு பெற்றோர் வட நாட்டு சுற்றுலா செல்ல ,சஞ்சய் பெற்றோர் ராதாகிருஷ்ணன,கோமளமும் திருசெந்தூர் கல்யாணம் செல்கின்றனர்.

திரும்பும்போது சஞ்சய் போலவே ஒரு கெவின் எனும் பையனுடன் வர,…..அவன் பார்க்க சஞ்சய் போலவே இருக்கிறான்.சஞ்சயை டாடி என்கிறான் ,சாருவை சாரும்மா என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறான்.

கோமளம் கூட கலங்கி மகன் மேல் சந்தேகப்பட,ஆனால் சாரு சஞ்சய்க்கு ஆறுதலாகவும்,நம்பிக்கையும் வைப்பது அருமை.காதலும் புரிதலும் கொண்ட தம்பதியர்.DNA சோதனை பார்க்க சொல்ல,அதிலும் சஞ்சய் யோடு ஒத்துப்போக ……….அம்மா பேர் மேரி,மும்பை தங்கள் ஊர் என்று சொல்லும் கெவின் ………..குழப்பி நம்மை தெளிய வைக்கும் ……..பிரேமா கொடுத்தது விருந்தே

கெவினின் தந்தை யார் ?
சஞ்சய் DNA ஏன் ஒத்துப்போனது ……?
எப்பிடி இந்த பிரச்சினையில் வெளிவந்தனர் ……….என்பதை வழக்கம்போல் ட்விஸ்ட் களின் ராணி பிரேமா ………ஏகப்பட்ட ட்விஸ்ட் களுடன் …..ஒரு சூப்பர் கதை தந்து இருக்காங்க.

சாரு ஹனிமூன் பிளான் சொதப்பலும் சூப்பர்..சஞ்சய் சொல்லாமலே சுவிஸ் ஹனிமூன் க்கு ப்ளான் பண்ண,சாரு கோவாக்கு போட்டு அங்கே நொந்து நுடுல்ஸ் ஆகி வரும் சாரு ……..

இந்த பிரேமா ……..கோவாவையாவது கொஞ்சம் ஹோட்டல் வரைக் கண்ணில் காட்டிய பிரேமா ……….சுவிஸ் யை …..கண்ணில் காட்டல பா …….

அலையாக நீ ………கடலாக நான் – சுஜி

கதாநாயகன் – அரவிந்தன்
கதாநாயகி – பூஜா.

வேலைக்குப் போகும் பெற்றோருக்கு பிறந்தவள்.தன் பெற்றோரின் கஷ்டம் புரிந்து ,தன்னை தானே செதுக்கி கொள்கிறாள் குறையில்லாமல் .
அழகான குடும்பம் ,புரிந்த காதல் கணவன் ,குட்டி குழந்தை ,அன்னை தந்தையாக மாமன் மாமியார் என இருக்கும் அவள் ,கல்லூரி காலத்தில் ஏற்படும் நட்பு ,காதல் ……என பாதிக்க பட்டதை அசை போட்டு ……இன்றைய சூழலில் கணவன் உதவியுடன் அதை ,எப்பிடி சரி செய்கிறாள் எனும் கதை ,இளமை துள்ளலுடன் இனிய கதை

மாலை சூடும் வேளை -சுஜா

அழகான ஒரு கூட்டு குடும்பம்.அதில் சிறுவர்கள் அடிக்கும் லூட்டி ,
கோவம் ,செல்லங்கள் என ஒரு மகிழ்வான கதை.
ஷரன் ஷஹானா ……..இருவரும் அத்தை ,மாமா பிள்ளைகள்.
இருவருக்கும் இடையே காதல் ,மோதல் ,ஈகோ …….என பல கோணங்கள்…..

இரு குடும்பங்களிலும் இவர்கள் சேர விரும்பினாலும் ,அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு அளிப்பது அழகு.

சித்ரா ஒர்கத்தியின் பொறாமையை நல்லா வெளிபடுத்துரா ………இன்றைய சில பெண்கள் தவறான வழி காட்டுததால் தங்கள் வாழ்வை கெடுத்து கொள்வதற்கு இவள் ஒரு எடுத்து காட்டு……நல்ல குடும்பம் அமைந்தும் சரியாய் ……..வாழ்வை நோக்காதவள்.

இவளிடம் பணியும் சஹானாவை ,அவளே எதிர்த்து நிற்க பழக்கும் ஷரன் நடவடிக்கை சூப்பர்.
ஆனாலும் காதலிக்கும்போது …..தேடும் ஆண்கள் ,கல்யாணத்திற்குப் பின் அதை தொடர்வதில்லை எனும் சின்ன சின்ன விஷயங்களை சொல்ல முயற்சி செய்து இருக்காங்க எழுத்தாளர் சுஜி.

ஆனால் முதல் கதை என்பதால் ,அழுத்தமா சொல்லல …………
இனி வரும் கதைகளில் முத்திரை பதிக்க வாழ்த்துகளுடன் ………

இன்பா – முகத்திரை

ப்ரதீப்குமார் ஆட்டோ ஓட்டுகிறான் .
ந்நதினி .இறுக்கமான போலீஸ் அதிகாரி.
தான் ஒரு பெண் என்பதையும் மறந்து கடமை தவறாதவர்.
எல்லோருக்கும் சிம்ம சொப்பணம் அவள். அன்பு ,பாசம் என்ற உறவுக்கு அஅப்பாற்பட்ட அவளை காதலித்து மணந்து …அவளை சாதாரண பெண்ணாக மாற்றுகிறான் பெப்பி.
ராசி என்ற பேரில் ஒதுக்கி வைக்கப்படும் பிஞ்சு மனத்தை பற்றிய கதை.
ந்நது அவள் தந்தை வழி பாட்டியால் ஒதுக்கப்பட்டு,ரணபட்டு…இரும்பாகிறாள். அஅப்பொழுது சிறு வயதில் அவளுக்கு ஆதரவாக பெப்பி எனும் தோழன் கிடைக்கிறான்.
அவனும் காலத்தால் ,சொல்லாமல் பிரிய …உறவுகள் ,நட்பு மீதும் நம்பிக்கை இழந்து …விரக்ததியில் வேலையை …உயிராய் எண்ணுகிறாள் .

ப்ரதீபின் நண்பனாக வரும் சரவணன் ,ந்நதுவின் வீட்டில் இருக்கும் அவள் உதவியாளர் ரோஸ் இவர்களின் காதலும் ,குறும்பும்…கதையின் சுவாரசியத்தை கூட்டுகிறது.

அமைச்சர் கொலை கேஸை துப்பறியும் அவள் ,எதிர்கொள்ளும் ஆபத்து,பெப்பியை …பயம் கொள்ளச் செய்கிறது.இதனால் கேஸ் சிபிஐ யிடம் போகிறது.
தோல்வியில் துவளும்,ந்ந்து பெப்பி காதலால் மனம் தேறுகிறாள்.ராசியால் உள்ளுக்குள் பயந்து வாழும் ந்நதுவை…எப்படி பெப்பி வெளிகொணர்கிறான்…..உறவை இழந்தவளுக்கு உறவாக சரவணன் ரோஸ் …மாற…….சிபிஐ உண்மை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் …ந்ந்தினியின் உழைப்பு வீணானதா…என அறிய படியுங்கள் இன்பா கதை.