மனக்குகை – காஞ்சனா ஜெயதிலகர்

மனக்குகை – காஞ்சனா ஜெயதிலகர்

செல்வம் – ஓவியர் ,கஸ்துரி -வரலாற்று ஆசிரியர்.இருவரும் காதலித்து மணந்தவர்கள் ………சித்ரா ,வருணன் எனும் அழகிய பரிசு.
அஜந்தா ஓவியங்கள் பார்க்க பள்ளியில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் …………ஒன்று போல் இறப்பிலும் தங்கள் காதலை நிருபித்து சென்று விடுவார்கள் ……….அந்த அம்மா கைப்பையில் இருந்த ,ஒருவர் நினைவஞ்சலி படமும்,முகவரியும் ஈர்க்க ……..படம் இவள் சாயலில் ……….அவள் மூத்த அத்தை ,வடஇந்தியனை மணந்து ………வீட்டினரால் ஒதிக்கி வைக்க பட்டவர்.

பாசமான பெற்றோரையும் இழந்து ,நகரமயாமதலில் குடியிருந்த வீடும் போக ………..வெறுமையில் இருக்கும் சித்ரா மாமனுக்கு கடிதம் போடுகிறார் ………உறவு வேண்டி.

இந்நிலையில் அப்ப படத்துக்கு ,இவள் எழுதிய கட்டுரை ………பரிசு பெற்று ………மேலும் பல இடங்களை கண்டு எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது ………..அப்படி செல்லும் இடமாக தங்கள் பெற்றோர் பிரிந்த இடத்தையே ……….தேர்ந்து எடுத்து செல்கிறார்கள் ………அப்படியே தங்கள் மாமனை சந்திக்க ……….

ஏற்கனவே மாமனின் தம்பி மகன் இருக்க ………அவரும்,அவள் காதலியும் இவள் மேல் கடுப்பில் ………..மாமனோ இவள் போகும் முன்பே ………சொத்தை கொடுத்து வாரிசாக ஆக்கும் எண்ணத்தில் ……

இங்கே வரும் அவள் ……….தன் மாமனின் ஆசையை நிறைவேற்றினாளா ……….
மாமன் மகன் ரத்தினம் சரத் தின் ……..கோவத்தைக் குறைத்து
காதலாக எப்பிடி மாற்றினாள் ……..என்பதை அழகான கவிதை போல சொல்லும் கதை ………….சிறிதாக இருந்தாலும் எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நடை ………

உயிரில் கலந்த உறவே – தீபிகா ராணி

உயிரில் கலந்த உறவே – தீபிகா ராணி

ஹர்ஷித் – அத்தை பையன்
அக்ஷிதா – மாமா பொண்ணு

வழக்கமான கதை …சிறுவயதில் பேசிய திருமணம் சின்ன சின்ன தகராறுகள் …….சண்டையாக முடிய ……….கதாநாயகன் மனதில் மட்டும் அவள் மேல் பிரியம் ……அதுவே அவளை அவனிடம் கொண்டு சேர்க்குது.

கார்த்திக் ,அபி சின்ன மாமா பிள்ளைகள் .சுரேஷ் ,ஷீலா தம்பதியரின் வாரிசுகள் ………அபி செம வாலு ,வாய் அவள் தோழி அர்ச்சனா ……..அவளை கார்த்திக் காதலித்து எந்த சிரமமும் இல்லாமல் ………இணைகிறான்.

கண்ணா,பிரியா …..அரும் புதல்வர்கள் பெற்ற சேகர்,லலிதா தம்பதியர் …….சுரேஷின் அக்கா .இங்கும் அண்ணன் .தங்கை பாசப்பறவைகள் …..கண்ணா தோழன் ஷாம் …….இவனும் இவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கம் .

ராமு ,ரோஹினி ……..சுரேஷ் மூத்த அண்ணன் …….இவங்களுக்கு சந்தோஷ் என்ற பையன் ……….

குடும்பத்துக்குள் நடக்கும் சிறு சிறு சண்டைகள் ,பொறாமைகள் என ………குறும்புகள் மற்றும் கலாட்டாக்கள் வுடன் அழகாக் சொல்லி இருக்காங்க

ரோகினி போன்ற ஆளுகள் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ……தங்கள் குழந்தைகளை உறவுகளுடன் இணைய விடாமல் தடுத்து பின்னர் தங்களுக்கு தாங்களே பள்ளம் தோண்டி கொள்வார்கள் …..அதை சொல்லி இருக்காங்க ………சிறு வயதில் பாச சந்தோஷ் …..அவனையும் பணத்தின் பக்கம் ………சாய வச்சுட்டா ரோஹினி.

ஹீரோ என்பதால் ரோஹினி யாலே ஏற்பட்டதே பிரிவு என்று கண்டு அதையும் நீக்கி ……….பிரிந்த குடும்பம் இணைகிறது ……மகிழ்வுடன்.

உறவுகளின் அருமையை சொல்லும் கதை ……….சில இடங்களில் சொந்தமாக நடந்ததை கற்பனை கலந்து தந்தேன்னு சொல்லி இருக்காங்க …….அதில் படிக்க உறவினர் வீட்டில் தங்கிய அனுபவமும் ………..எனக்கும் உண்டு ……….

யாதார்த்தமான கதை …………..படிக்கலாம்

உயிரில் கலந்த உறவே – Uyiril Kalandha Uravae By Deepika Rani

Read more: http://www.penmai.com/forums/stories-novels/88846-novel-discussion-7-a-311.html#ixzz3WjNg2ntC

கடவுள் அமைத்த மேடை – தமிழ் மதுரா

கடவுள் அமைத்த மேடை – தமிழ் மதுரா

சிவபாலன் தனியார் வங்கியில் வேலை கிடைத்து மும்பை செல்கிறான்.அல்சர் காரணமாக paying guest ஆக தங்க …….செந்தில் வீட்டிற்கு போகிறான் …………பார்த்தவுடன் தெரியுது அவனும்,அவன் மனைவியும் பணப்பேய்கள் ……..சுயநல பிசாசுகள்
அங்கே தான் அவள் தங்கை வைஷாலி குழந்தையுடன் புருஷன் இல்லாமல் உழைத்து கொடுக்கிறாள் ……..அம்மா சங்கரியும்
இவன் இந்த குடும்பத்துடன் இயல்பாக பொருந்தி போய் விடுகிறான்

இவர்கள் பேரில் உள்ள சொத்தையும் எடுத்துக் கொண்டு,பணத்துக்காக தங்கையை அந்த வீடு கட்டி கொடுக்கும் காண்ட்ராக்டருக்கு சுமன் கட்டி கொடுக்கிறான் ……..அவனோ வேற ஒருத்தியை ஸ்வப்னா காதலிக்கிறான் போல ………அவனுக்கு ஒரு சுயநல தங்கை அங்கீதா அவன் காதலை கெடுத்து வைஷாலியை முடித்து வைக்கிறாள் ……..அவள் பொண்டாட்டி கூட பேச பொறுக்காதவள் …….தேன் நிலவில் கூட வியாபாரம் னு தொல்லை கொடுக்கிறாள் ……..அப்ப தான் இவள் கேள்வி கேட்க மாட்டாள் என்றே உன்னை அண்ணனுக்கு கட்டி வைத்தேன் என்று சொல்கிறாள் ……..

எனக்கு தான் அண்ணன் என்று சண்டை போடும்போது……..என் சந்தோசம் தான் என் அண்ணனுக்கு முக்கியம் என்கிறாள் …….அப்ப ஏன் என்னை கல்யாணம் பண்ணி வச்ச என்று கேட்க ……..அதை மட்டும் ரெகார்ட் பண்ணி அண்ணனுக்கு போட்டுட்டு …….இவள் மோசம் இவளை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ ……என் கடைசி ஆசை என்று சொல்லி

இனி நீ என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே உனக்கு வாழ்க்கை என்று மிரட்டி ……..விளையாட்டாக விபத்தை ஏற்படுத்த எண்ணுகிறாள் ……..விளையாட்டு வினையாகிடும் போல ……..அவன் இவளை விட்டு வேற பொண்டாட்டி பிள்ளைகள் கூட ….இவள் அண்ணன் வீட்டில் உழைத்தும் இடி சோறு உண்கிறாள்

இதிலிருந்து தப்பிப்பாளா ஷாலி ?
சிவபாலன் கூட எப்படி இணைவாளா ………அல்லது அவனை கண்டாலே கடித்து கொதறும் …….ஷாலி மனநிலை அறிய படியுங்கள் ………தமிழ் கதை

சித்திரை நிலவு – லீனா பாகிமா

சித்திரை நிலவு – லீனா பாகிமா 

வெண்ணிலா – காதலில் இரு வீட்டார் சம்மதம் தான் முக்கியம்.பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணமே சாத்தியம் எனும் அபிப்பிராயம் கொண்டவள் ……..சரவணன் பார்வதி தம்பதியரின் செல்ல மகள்.சரவணன் தங்கை லக்ஷ்மி ,அவள் கணவன் நண்பன் & மச்சினன் தனசேகரன் ……..இவங்க பொண்ணு வினயா,விக்கி .
விக்கி நிலாவின் guide ,friend,அண்ணன் ,அப்பா ,தாய் ……philosopher மொத்தத்தில் all in all.இவர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்.அங்கே வினி ,அவினாஷ் கல்யாணத்திற்கு முன்பே வரும் அவள் ,ஊர் சுற்றும்போது ……..அவளை பார்த்தவுடன் காதலில் விழும் விஷ்வா.

இவளோ காதலில் நம்பிக்கையற்றவள் அல்லவா ……….கவர முடியாமல்,விக்கி ,அவினாஷ் உதவியை நாடுறான்.விஷ்வா பெரிய பணக்காரன்,ஜாதியிலும் உயர் குடியினன் ……..அவர்கள் நல்லவன் என்று ,பெரியவங்க வச்சு பேசுங்க சரி வரும் என்று ஐடியா கொடுக்குறாங்க.அவனும் அத்திம்பேர் கார்த்திகேயன்,அப்பா பரமசிவனை உடனே வர வைத்து சரவணனிடம் பேசுறான். குடும்பமே அவன் பக்கம் எனவும் ……….கொஞ்சம் கொஞ்சமாக இவன் பக்கம் சாய்ந்து ……..love சொல்லும் மனநிலைக்கு வருகிறாள் நிலா.

விஷ்வா அம்மாக்கு உடம்பு முடியலை என்று உடனே பரபரப்பாக கிளம்பும் விஷ்வாவை தொடர்ந்து செல்லும் சரவணன்,பார்வதி தம்பதியர் அவன் அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை அறிகிறார்கள்.
மகளின் காதல் உணர்ந்து சொல்லாமல் இருக்க,அவளும் விஷ்வா பிறந்தநாளுக்காக surprise விசிட் கொடுக்க எண்ணி சென்று .அங்கே அவள் அக்காவால் அவமானபடுத்தப் படுகிறாள்.உடனே விஷ்வாவிடம் கல்யாணத்தை மறுத்து,தந்தையின் கனவான பள்ளிக்கூடம் தொடங்குவதில் இருக்க ………திடிரென்று மாரடைப்பில் இறக்க,அத்துடன் உடனே நோய் வாய்ப்படும் பார்வதி அம்மா ,நிலாவுக்கும் விக்கிக்கும் தாலி கட்ட வைத்து இறைவனடி சேர்கிறார்.

விஷ்வா தன் காதலை சொல்லி மீண்டும் நிலா வாழ்வில் நுழைகிறானா ?

நண்பனாக இருக்கும் விக்கி கணவனாக அவளால் ஏற்க முடிகிறதா ?

இல்ல மஞ்சக் கயிறு மாஜிக் ல ………இருவரும் கணவன் மனைவி ஆகிறார்களா ?

கனவே கை சேருமா ?- மல்லிகா மணிவண்ணன் .

கனவே கை சேருமா ?- மல்லிகா மணிவண்ணன் .

விக்ரம் – பேரிலேயே போதையை கொண்டவன் ……..தினம் குடிப்பான்.வாய் ……..வாய் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவான்.மாவட்ட நீதிபதி.

தன் அக்காவின் நாத்தினாரை எல்லோரின் கட்டாயத்தின் பெயரில்,ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மணக்கிறான்.தாய் தந்தையை விபத்தில் இழந்து,அக்கா வீட்டினர் தயவில் படிக்கிறான் ……அங்கே இளையவன் கந்தசாமியால் அதிகம் சீண்டப்பட்ட அவன் கல்யாணத்திற்கு பிறகும் உறவுகளின் தொணதொணப்பில் வெளியேறுகிறான் ……பதவியுடன் வரும் அவனுடன் மனைவியை சேர்த்து வைக்கிறாள் அவன் அக்கா லதா ….எல்லோர் மேலும் உள்ள கோவத்தை வார்த்தையால் தேள் போல கொட்டுகிறான் ……ஆனாலும் எருமை மாடு னு கூப்பிட்டு ,அதை காதலில் சொல்றேன்னு கடைசி வரை சாதிச்சுட்டான். கந்தசாமி கல்யாணத்தில் அவன் மனைவியை அவமானபடுத்தும்போது அங்கே பெரிய ரணகளத்தை எதிர்பார்க்க,அதை காமெடி ஆக்கிய பெருமையும் நீதிபதியையே சேரும்.காதல் இல்ல என்றே அன்னக்கிளியிடம் தோற்கும் விக்ரம் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

அன்னக்கிளி – இவன் எருமை மாடு என்பதற்கு ஏற்ப இவன் வசவு மழையைப் பொறுக்கும் அவள்,இவன் பேச்சை ஒரே பார்வையில் தகிடு பொடி ஆக்குகிறாள்.

எல்லோரிடமும் பொறுக்கும் அவள் பொறுமைசாலி என்றால் தப்பு, விருப்பம் இல்லாமல் கட்டிய தாலியைக் கழட்டி அவன் மூஞ்சியில் வீசும் தைரியசாலி,பின்னரும் அவனுடைய தந்தை இவளையே மருமகளாக்க செய்யும் முயற்சியை,அப்போது வக்கீலாக இருக்கும் விக்ரம் ஒரே கேள்வியில் தூள்

தூளாக்குகிறான்………..அமைதியாக வந்து ,வீட்டு செல்லப்பெண்ணான அனு,கொஞ்சம் கொஞ்சமாக அந்த கோவக்கார வாயாடி நீதிபதியை காமெடி பீஸாக்கி தன் முந்தானையில் அடக்குகிறாள்.

பழனிசாமி,லதா இவர்கள் ஆதர்ச தம்பதிகள்,இவர்கள் ஏன் பேசாமல் இருக்கிறார்கள் ………….?என்பதே கொஞ்சம் விக்ரமை அடக்கும் அங்குசம்.

கந்தசாமி – விக்ரமினை எதிர்க்கும் மச்சினன்,அவனை நொந்தசாமி ஆக்குகிறான் விக்ரம் தன் செயலால் …….அவனையே மச்சான் என மரியாதையாக அழைக்க வைக்கும் விக்ரம் கிரேட் ….

சௌமி விக்ரமின் இன்னொரு தங்கை, இவளே எல்லா பிரச்னைகளின் ஆணி வேர் இவளை காக்கவே விக்ரம் போய் சிக்குகிறான்.ஆனாலும் இவர்களின் பாசத்தை பார்த்து மருகும் அனுவை …………நீ தான் என் குடும்பம் என கிளீன் போல்டு ஆக்குகிறான் விக்ரம்

.தமிழச்சி மூலமாக நம் இனமக்களின் உணர்வுகளை அழகாக வெளிபடுத்தி இருக்காங்க மல்லி அதுக்கு ஒரு நன்றி.போராளிகளின் தலைவன் பெயரை தன் அக்கா மகனுக்கு வைத்து மனதிருப்தி கொள்கிறான் ……….அம்மக்களின் கனவே கை சேர ஆசைபடும் விக்ரமின் ஆசையோடு என் ஆசையும் சேர விடியலுக்கு காத்திருப்போம். 

முகிலனமே முகவரி கொடு – உமா சரவணன்

ஹாய் friends,

முகிலனமே முகவரி கொடு – உமா சரவணன்

சூர்யா ,அருள் இருவரும் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுடன் தொடங்குது ………கதை.முரளிதரன் சுதா தம்பதியரின் மகன் அருள்,தீபா ……..சந்தோஷமான இனிய குடும்பம்.தங்கையின் மீது பாசமும் ,பொறுமையும் கொண்ட ஜென்டில்மேன் அருள்.

சூர்யா கோவமும் வேகமும் நிறைந்தவன்.இவனின் உயிர் நண்பன் ஜீவன் .
நிலா – தைரியமும்,புரட்சி எண்ணமும்,குறும்பும் கொண்டவள் நிலா.பிரபு -நிலா தம்பதியரின் மகள்.

மூவரும் சந்திப்பில் வேகத்தால் சடன் பிரேக் போட்டு,அருளிடம் வசவு வாங்க போகும் சமயம் ,தவறாகப் புரிந்து அருளை சட்டையை பிடிக்கிறான் நம் கோப ஹீரோ சூர்யா …..அவனின் கோவக்கணலில் இருந்து நிலாவை மீட்டு அனுப்புகிறான் …….அருள் பரிசு வாங்க ,அவன் தங்கை பாராட்டும் இனிய காட்சிக் கண்டு தன் பரிசையும் அவளிடமே தரும் எண்ணம் தோன்றுவதை ………ரசிக்கும் சூர்யா அழகு.

நிலா வழக்கம் போல வரும் குறும்பு நாயகி,தெரு வாண்டுகளின் தோழி ………தன் நண்பனுக்காக பந்து எடுக்க …….வீட்டுக்குள் இறங்க …….அது என்ன நம்ம டேரர் சூரியன் வீடு தான் ………இப்படி பார்க்கும் இடமெல்லாம் மோதலில் தொடருகிறார்கள்.

சூர்யா தீபா பொண்ணு பார்க்க தரகர் மூலமாக செல்கிறான் ……..அங்கே சூர்யா இறுக்கமாக இருக்க …….மகேஸ்வரி அவன் அம்மா ………என் வளர்ப்பு மகன் என்று ஜீவாக்கு பொண்ணு கேட்குறாங்க ………பார்த்தவுடன் இருவருக்குமிடையே ………பவர் பாசாயிடுது ………அவள் அப்பா வராமலே முடியுது ……….பின்னர் பொறுப்பான அண்ணனாக தங்கை கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்றான் …..அங்கே ஜீவா வீட்டில் போய் நிற்க ………….அங்கே இருக்கு ட்விஸ்ட்.

அதன் பின் மார்க் எல்லாம் அள்ளி செல்றான் சூர்யா.
அதே போல் நிலாவும் வேலைக்கு சேரும் கம்பனி ……….சூர்யாவோடதாக இருக்கு………கட்டட துறையில் இருந்து நகை வடிவமைப்பிலும் கால் பதிக்கிறான் ……..அது நமக்கு தெரியாத புதுத் துறை என்று PA அது உள்ளுணர்வு என சொல்லி தைரியாமாக இறங்குகிறான் ………இதில் ஒருநாள் ஒரு ரவுடி துரத்த ………நிலாவையும் காப்பாற்றுகிறான்.

அருள் தன் காதலை சொல்லி நிலாவை பொண்ணு கேட்கிறான் …….சூர்யாவை சீண்ட சரி சொல்லும் நிலாக்கு தெரிய வருகிறது …….அருள் அத்தை பையன் என்று………தங்கை,மற்றும் அருளின் கல்யாணம் அவர்கள் சொந்த ஊரில் நடக்க இருக்கிறது ……..ஒரே நாளில்.

கல்யாணம் முதல் எல்லாமே சூர்யாவின் ஆளுமையில் கதை சுவாரசியமாக நகருகிறது ………நிறைய அழகான திருப்பங்களுடன் ……..

இதிலும் நாம் பேச நிறைய விஷயங்கள் இருக்குப்பா ………படிக்காதவங்க படிச்சுட்டு வாங்க …….ரதி படிக்கிறியா ?
பெரிய கதை முதல் பார்ட் முடிந்துவிட்டது …….இரண்டாவது தொடங்கி மூன்று அத்தியாயம் போட்டாச்சு ……..ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவு உண்டுன்னு சொல்லி இருக்கிறாங்க ……..

லிங்க் –முகிலினமே முகவரி கொடு – Mugilinamae Mugavari Kodu By Uma Devi