வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே- ரமணிச்சந்திரன்

வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே

மதுரம் ,விஸ்வநாதன் தம்பதியரின் செல்ல மகன் நித்த்யானந்தம். நல்ல மகன் ,அண்ணன் ,கணவன் …………அம்மா பார்த்தப் பொண்ணை மணந்து ………அவள் மனம் கோணாமல் வாழ்க்கை நடத்துபவன் . கர்ப்பம் தரித்தவுடன் தாய் வீடு சென்ற மனைவி பிரியா வருடம் கழிந்தும் வரல என்று அன்னை போர்க்கொடி தூக்க ……..அதிரடியாக அழைக்க வருவதாக சொல்ல ……..மனைவி இறந்ததாக போன் ………

அடித்துப்பிடித்து ஓடும் குடும்பம் …….பேத்தியுடன் திரும்புது ….

மகனுக்கு மறுமணம் ஏற்பாடு செய்றாங்க …..அங்கே நிச்சயிக்கும் பெண் பறந்து விட ….தரகர் சாருமதியை மாற்றி விடுகிறார் மணப்பெண்ணாக ………….ஆள் மாறாட்டம் என்று அறியும் நித்யா குடும்பம் …….சாருவை வேலைக்காரியாக ஆக்க …….குழந்தை தீபா வை வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்படுது…………அனாதை ஆசிரமத்தில் வளரும் சாரு,தாமரை தோழிகள். கைவேலை செய்யும் தாமரையை மணக்கும் மதியழகன் சராசரி ஆண் ……..தோழிகள் உறவாக எண்ண ……….அவனோ இருவரையும் வளைக்க எண்ணுகிறான் ………வலைக்கு தப்பி இங்கே உலையில் சிக்குகிறாள்.

குழந்தை வளைர்ப்பில்…………டிஸ்டிங்கஷன் எடுக்கும் சாரு ……….படிப்படியாக குடும்பத்தில் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறார் ………

வீட்டு மருமகள் உரிமையும் பெறுகிறாள்.

நித்யன் மனதிலும் இடம் பிடிப்பதையும் அழகாக சொல்லி இருப்பாங்க ரமணிம்மா

நித்யன் முதல் கல்யாண வாழ்வின் கறுப்புப்பக்கம் என்ன ?

ஏன் நல்லவர்கள் சாருவை தவறாக நடத்துகின்றனர் ?

எப்பிடி சாரு தன் வாழ்வில் வெற்றி பெற்றாள் என்று அறிய படிங்க ………………..

ever green star writer ரமணிம்மா கதை வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே படிங்க

பேதமுற்ற நெஞ்சமடி – ரமணிச்சந்திரன்

பேதமுற்ற நெஞ்சமடி – ரமணிச்சந்திரன்
ஆனந்த ரூபன்
வசுந்தரா

திருப்தி பல்பொருள் அங்காடியில் உயிர்சத்து உணவுப் பொருட்களை supply செய்து வருகிறான் ……..அங்கே வேதிபொருட்கள் உள்ள வரகரசி அனுப்பியதை கண்டுபிடித்து ………உரிமையாளர் ஜெயதேவன் ……ஆர்டர்யை cancel செய்ய ……..அங்கே வாதாடி தோற்கும் ரூபன் ………..அடுத்த முறை ஆர்டரை பெற குறுக்கு வழி தேடுகிறான் .

தன் அக்காள் மக்கள் இருவருக்கும் உடை எடுக்க செல்லும் ஆனந்தன் ……..தேர்வு செய்ய அங்கே உள்ள வசுவின் உதவியை வேண்டுகிறான் …..பின் அக்காமகள் நித்தி ஆடல் வகுப்பிலும் அறிமுகம் தொடர்ந்து ,அவர்கள் வீட்டு விழா வரை பங்கு பெறுகிறாள் ………

தம்பியையும் ,வசுவையும் இணைத்து அக்காள்களின் மகிழ்வை கண்டு எரிச்சல் படும் ரூபன் ………தன் எண்ணத்தை சொல்கிறான் ………தங்கள் வியாபாரத்திற்காக மணம் முடித்து ,வாடிக்கையை தக்க வைக்க போவதாக ………..மனம் வருந்தும் அக்கா ………வேண்டாம் பெண் பாவம் என்று சொல்ல ………தடுமாறும் ஆனந்தன் தன் தவறை உணருகிறான் …………..மறுநாள் வசுவே இவன் இல்லம் தேடி தன் மனதை வெளியிட …………….ரூபன் தன் கடந்த காலம் ,மற்றும் அவளை ஏமாற்ற எண்ணிய அவன் திட்டத்தை சொல்ல ………..அவள் விலகி செல்கிறாள் …………….

கையில் கிடைத்த சொர்க்கத்தை இழந்த ஆனந்தன் மீண்டும் பெற்றானா ?

விலகி சென்ற வசு ,ரூபன் எப்பிடி இணைந்தார்கள் ?
ரூபனின் கடந்த காலம் என்ன ?
வசுவின் அண்ணன் முடிவு என்ன என அறிய படியுங்கள் ………

சின்ன கதை தான் ….வழக்கமான கதை ….
தன் தவறுக்காக தண்டனை ஏற்க இருக்கும் ஆனந்தனை எனக்கு பிடித்தது ………

நட்சத்திர விழிகளில் வானவில் – கனி ஹேமா

நட்சத்திர விழிகளில் வானவில் – கனி ஹேமா

கதாநாயகன் – உதய பிரபாகரன்
கதாநாயகி -மித்ரா நந்தினி

துடுக்குத்தனம் ,துள்ளலும் கொண்ட சுட்டி பொண்ணு நந்தினி அருவியூர் திருவிழாக்கு செல்லும்போது தான் கேட்கும் கடத்தல் பேச்சைக் கேட்டு ,திருவிழாவில் சுற்றும் விடலைப் பையன் பிரசாத் திடம் வம்பில் மாட்டி கொள்கிறாள் ……….அவளை காப்பாற்ற தாலி கட்டும் பிரபா ……….பின்னர் அவள் தந்தையிடமே விட்டு வருகிறான் ……உரிமை கொண்டாட மாட்டேன் என்ற உறுதி மொழி தந்து …பின்னரும் பிரசாத் தொல்லையால் தவறான நபருக்கு மணம் முடிக்க ஏற்பாடு நடப்பது அறிந்து ,சென்று தானே மணம் புரிந்து தன் வீட்டிற்கு கூட்டி வருகிறான் ………..

.தன்னை முதலில் விட்டு சென்று விட்டான் என்ற கோபம் ,இப்ப தந்தையை அவமதித்து கூட்டி வந்து விட்டான் என்றும் …………அவனை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சுகிறாள் …………சும்மாவே குலை இல்லாமல் ஆடியவளுக்கு ……..பிரசாத் இவன் தம்பி என்று அறிந்தால் ………….?பிரபா கதி …………

நாச்சியார் ,பாக்கியம் ,தனம் அம்மாள் என்று எல்லோரும் அவளை தாங்கி கண்ணு போல பார்க்கிறார்கள் அழகான கலக்கல் வீடு …….
பிரசாத் தொல்லை வீட்டுக்குள்ளேயே வள்ளியால் தொடருது ………..
பிரபாவின் அத்தை வேணி தன் பொண்ணைக் கட்டல என்று நந்தினிக்கு தொல்லை கொடுக்கிறார் ………

அத்தை பொண்ணு கெளரியை தன் இறந்த தங்கையாக பார்க்கும் உதய் தன் நண்பன் பலிகடா (ஏன் அப்படி சொல்றேன் என்றால் தான் வாங்க வேண்டிய அடியை இவனுக்கு திருப்பி விட்டு விடுவான் ……….அவ்வளவு நல்லவன் )விஷ்ணு க்கு மணம் முடித்து வைக்கிறான் …….அதிலும் கோபம் அடைந்த வேணியின் நடவடிக்கை ……….நந்தினியின் உயிர்க்கு உலை வைக்க ……………

பிரபா தன் மனைவியை இருவித வேணி &பிரசாத் தாக்குதலில் இருந்து எப்பிடி காப்பாற்றினான் ………..?
வள்ளி பிளான் என்ன ஆனது …………?
மாமனாரின் கோவத்தை தணித்தானா ………?

என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட் களுடன் கதை சொல்லும் சரண்யா …………தான் ஒரு புது எழுத்தாளர் என்பதை நம்மை மறக்க வைத்திருக்கிறார்.

வாழ்த்துகள் சரண் ……….மீண்டும் விரைவில் புதுக்கதையுடன் வர வாழ்த்துடனும் ………..ஆர்வமுடன் by பொன்ஸ்

வானம் வசப்படும் -அமுதவல்லி கல்யாண சுந்தரம்

வானம் வசப்படும் -அமுதவல்லி கல்யாண சுந்தரம்

ஆகாஷ் …தேவகி,சுவாமி நாதன் தம்பதியரின் தவப்புதல்வன் …சுட்டி,செம ஜாலியாக வாழ்வை அனுபவிக்கும் மகன் ,கலாட்டா பேர்வழி,எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஸ்போர்டடிவ் மேன் …ஐபிஎஸ் ஆபிசர் அப்பா,கல்வித்துறையில் பணிபுரியும் அம்மா…விநாயகரிடம் கோரிக்கை வைக்கும் இந்திராணி பாட்டி.

வசுமதி-பாலச்சந்திரன் ,கல்யாணி தம்பதியரின் அன்புமகள்,பொறுப்பான மகள் …உலகம் பசுமை அடைய எண்ணி, தன் வாழ்வில் திட்டம் போட்டு பசுமை தாயகம் என்ற அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் நட்டி …பூமித்தாய்ககு சேவை செய்பவள். தீபிகா இவள் செல்லத்தங்கை,மருத்துவக் கல்லூரி மாணவி…

சென்னையில் மருத்துவக்கல்விக்கு இடம் கிடைக்க வருந்தும் தீபிகா,சமாதனப்படுத்தும் அக்கா என பீச்சில் …சந்தித்த ஆகாஷ் …அவர்களிடம் ஈர்க்கப்பட்டு ….அவள் அழகிய நீண்ட கூந்தல் ,அதிலுள்ள பூனைக்குட்டி கிளிப்….அடையாளம் …தோழனின் தங்கை கல்யாணத்திற்கு போகும் போது மதுரை இரயில் நிலையத்தில் பார்க்கும் வசுவிடம் தன் மனதை சொல்ல ….அவள் முதலில் சுயமாக சம்பாதி, வீட்டுக்கு,நாட்டுக்கு உபயோகமாக ஏதாவது செய் என்று திட்டி ….விலக…அவள் வார்ததையிலே காயப்பட்டு,கோப்பபட்டு,இறுதியாக பண்பட்டு….துப்பாக்கி சுடும் வீர்ராக …நாட்டுக்கும் ,பெற்ற தாய்தந்தைக்கும் …..பெருமை சேர்த்து…..தன் காதலை சொல்லி வெற்றி பெறுகிறார் ஆகாஷ் …

இருவரையும் பார்க்கும் போதே சண்டையிட்டு பிரிய வைக்கும் அம்மு,வெற்றி பெற்றபின்னர் அவளை கண்டு ,வெற்றி விழாவில் பங்குபெற வைத்து….தன் மனம் கவர்நதவளை பற்றி சொல்லி,தன் பரிசுத்தொகை பாதியை அளித்தும் …தன் சுடும் திறனின் படி அவள் மேலே பலூன் வெடித்து ஜிகினாக்களை …தூவி உலகிற்கு அறிமுகப்படுத்தும் ….அந்த சீன் …நேர்த்தியான திரைப்படம் தோற்றது….இது அம்முவின் சிறப்பு ட்விஸ்ட் …கதைகளில் ஒன்று….

சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சுவாரசியத்தை சிறிதும் ….குறையாது அள்ளித்தரும் அட்சய பாத்திரம் போன்றது. அது போன்ற கதைகளில் ஒன்று இது…எனக்கு ரெம்ப பிடித்த கதை…..படித்து பாருங்கள் ….இப்ப இப்படி என் மனதை கொள்ளை அடித்த கதைகளை தேடி ….மீண்டும், படிக்கிறேன் …

வருகிறேன் அடுத்த அமுதோடு