காமராஜர்

 

காமராஜர்.

அன்னை சிவகாமியின் அருமை புதல்வனே!

தமிழ் அன்னையின் தவப்புதல்வனே!

விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்து

சரித்திரம் படைத்த நாயகனே!

எளிமையின் இருப்பிடமே!

ஏழைப் பங்காளனே!

ஏற்றமிகு சிந்தனையின் சிகரமே!

ஆடுமேய்ப்பவனும்,மாடுமேயப்பவனும்

நாடாள எண்ணி,பள்ளிகள் பலகட்டி

கல்விக் கண்திறந்த ரத்தினமே!

மதிய உணவுத் திட்டத்தின் மன்னவரே!
சீருடை தந்த செம்மலே!

அணைகள் பல கட்டி உழவர்களுக்கு

அமுதூட்டிய அண்ணலே!

சட்டங்கள் கற்றதில்லை,

பட்டங்கள் பெற்றதில்லை,

திட்டங்கள் பலகோடி

தந்திட்ட அறிவுபெட்டகமே!

வரலாற்றின் வைர மகுடமே!

குமாரசாமியின் குலவிளக்கே!

கறுப்புக் காந்தியே!

ஆடம்பரமில்லா முதல்வரே!

தமிழக பொற்கால ஆட்சியின் மன்னவரே!

உன்றன் பிறந்தநாள்

என்றைக்கும் பொன்நாள்!

விண்ணும்,மண்ணும் உள்ளவரை

காமராஜர் புகழ் என்றும்

வளரும் ! மலரும் ! மணக்கும் !

நன்றி!நேரு மாமா

 

நேரு மாமா

                           கல்விச் செல்வம் கொடுக்கும் வள்ளல்களே,அவையிற் சிறந்த சான்றோரே,மாணவக் கண்மணிகளே,வணக்கம்.மனிதருள் மாணிக்கம் நேரு மாமா பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

                         சிப்பிக்குள் முத்து தோன்றுவது போல அலகாபாத் நகரிலே 1889 நவம்பர் 14 ல் மோதிலால் நேருக்கும் சொரூபராணிக்கும் மகனாகப் பிறந்தார்.இளமையில் கல் என்ற முதுமொழிகேற்ப படித்து பட்டம் பெற்றார்.சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

மனமோ சுதந்திர போரில் நாட்டம் கொண்டது. 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.சிறையில் இருக்கும் பொது உலக வரலாற்றை எழுதினார்.அவர் மகளுக்கு எழுதிய கடிதம் நான் கண்ட இந்தியா என்று இலக்கியமானது.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானார்.17 ஆண்டுகள் பண்புடன் ஆட்சி செய்தார்.

                         ஏடு தூக்கி பள்ளி செல்லும்

                           இன்றைய குழந்தைகள்

                       நாடு காக்கும் நாளைய மன்னர்கள்

                                                   – என்று நம்பினார்.அதனால் தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாட அறிவித்தார்.

                               ரோஜாவின் ராஜா

உலக சமாதான புறா

நவ இந்தியாவின் சிற்பி நம்மை விட்டுப்  பிரிந்தாலும்,

குழந்தைகள்

எதிர்காலம் என்னும் பூங்காவில்,நேருவின் இலட்சியங்கள் ரோஜாக்களாக மலரும்,

நிச்சயம் மலரும் என்றுகூறி என்பணி முடிக்கிறேன்

இல்லையில்லை தொடர்கிறேன்

நன்றி.