நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..மேக்னா

 

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..மேக்னா

கதாநயகன் – பரணி
கதாநாயகி – நாட்சி

ஆரம்பம் முதல் அதிரடி புயலாக இருவரும் ..மாற்றிமாற்றி மோத ,என சுவாரசியம் கடைசி வரை குறையாமல் கொண்டு போன மேக்னா வுக்கு ஒரு
கஜபதி ..சமுத்திரக்கனி போல ஒரு அப்பா.
சிவாத்மிகா ,செல்வாம்பிகை…அருமையான அம்மாக்கள்.
தியாகி தாத்தா ,அப்பா, தரணி என எல்லா பாத்திரங்களும் ..அருமை.
மதுஸ்ரீ ..countdown சூப்பர்.
பரஞ்சோதி ..கி…கி…லீலைகளும் ,அலப்பரைகளும் இறுதி வரை கலக்கல்.
அழகான கூட்டு குடும்பம் ..அதில் சிக்கல் ,காதல் ,பழிவாங்கல் ,துப்பறிதல் என காரம் ,கரம் மசாலா தூக்கலான கதை.

க்ளோ பாணியில் ஒரு பஞ்ச்.

கதை எவ்வளவு சூப்பரோ …அதைவிட அவங்க ud போடாததற்கு சொல்ற ….குட்டிக் கதைகள் அதை விட சூப்பர்.


மிஸ் பண்ணாமல் படிங்க friends.

 

மேலே உயரே உச்சியிலே – இந்திரா சௌந்தரராஜன்

 

மேலே உயரே உச்சியிலே – இந்திரா சௌந்தரராஜன்

தேவா மில் தொழிலாளி அருணகிரி பையன்.மூத்த இரு அக்காக்கள் கல்யாண வயதில்.மீனாட்சியம்மன் கோவில் வரும் அவன் அங்கே சாது பசுபதியிடம் வாயை கொடுக்கிறான்.அவனை நம்ப வைக்க அங்கே காவலர்களுடன் வரும் கைலாசம் பொண்ணு பிருந்தாவை முத்தமிடவைக்கிறார் தன் சித்து வேலையால் …………அங்கே தொடங்குது அவனுக்கு ஓட்டம்.

சாலையில் கிடைத்த நவரத்ன கற்களை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறான் ……..நகைக்கடை அதிபர் அருணாச்சலம் அவனுக்கு மேலாளர் வேலை கொடுக்கிறார்.அங்கே அவர் ஒரே பொண்ணு லேகா காதல் …………..

இங்கே மில் ஒனர் கைலாசம் தன் பொண்ணுக்கு பணக்கார மாப்பிள்ளை பார்க்க ………அவன் அயோக்கியன் என்று பிருந்தா முத்தம் கொடுத்த தேவாவையே காதலிக்கிறாள்.கைலாசம் மாந்திரீகவாதி உதவி நாடி ……….தேவாவை மாட்ட வைக்க எண்ணி ,நிறைய இழக்கிறார்.மகன் விஜயன் ,கள்ளநோட்டு விவகாரம் என ஈடுபட்டு மனைவி ,மகனை பலி கொடுக்கிறார்.

தர்மராஜ் என்ற வில்லன் ………அப்பா அவன் குழுக்கள் என ……..நூல் பிடித்து போய் ,போதை ,சிலை கடத்தல் என ……….மர்மமா போகுது ……இதில் பிரேம்நாத் எனும் போலிஸ் நட்பு பெற்று ………அக்காள்களின் கல்யாணம் ஏற்பாடு பண்ணுகிறான்………கொலையாளி பிடிபட்டு மர்மம் வெளியாகிறது.

கொஞ்சம் வசியம் ,மந்திரம் ,மாந்திரீகம்,ரசமணி , என போகுது கதை .

உன்னை விட மாட்டேன் – ரமணிச்சந்திரன்

 

உன்னை விட மாட்டேன் – ரமணிச்சந்திரன்

ஜெயதேவன் – வெற்றி பெற்ற தொழிலதிபன்.தந்தையின் திடீர் மறைவாலும் ,உறவினர்களின் நயவஞ்சக சூழ்ச்சியால்,இழந்த பணத்தை மீட்டு தொழிலையும் தூக்கி நிறுத்துகிறான்.தவறு செய்ய துணை போகும் தொழிலாளர்கள் பதினைந்து பேரை வேலை நீக்கமும் செய்கிறான் இரக்கமின்றி ……….சட்டப்படி அவர்கள் போராட முடியாத வகையிலும் ………..அவர்கள் வீட்டு பெண்கள் கேட்டும் ,மீடியாவில் அவதூறு பரப்பியும் ………மறுத்து விடுகிறான்.இதனால் கடுமை ,அலட்சியம் வந்து விடுகிறது இயல்பில்.தன்னம்பிக்கையையும் தாண்டி சிறிது கர்வம் கொள்கிறானோ ?என மகனை எண்ணி அன்னை வருந்துகிறார் .

வழக்கம் போல அன்னைதேவகி திருமணத்திற்கு பெண் பார்க்க ……அலட்சியம் காட்டும் மகனை கண்டு வருந்துகிறார்.இதனால் அந்த பெண்ணும் பாதிக்கப்படுவாளே என்று யோசித்து ……….பொண்ணு பிடிக்கல என்ற சொல்றார்.அப்ப பிடித்த பெண் ………..ஏற்கனவே இருக்கோ? என மகன் பாய்ண்டை பிடிக்க ………ஆம் தன் தந்தை வீட்டின் அருகில் உள்ள பெண் ,காஞ்சனி பற்றி சொல்கிறார்.

பதினேழு வயதில் இரண்டாம் தாய் ,வயதான கிழவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்ய ,தானே போலீஸ் ல வழக்கு கொடுத்து ……..கல்யாணத்தை நிறுத்தி படிப்பை தொடரும் அவள் துணிச்சல் பிடித்ததாக சொல்ல ………..தேடி கண்டுபிடித்து மணப்பதாக கூறி ,நிச்சயமும் ஏற்பாடு செய்கிறான்.

காஞ்சனி – தாயில்லா பெண் .படிப்பில் சுட்டி ,உபகார சம்பளத்திலேயே மேற்படிப்பு வரை படிப்பவள் .காஞ்சனி ஜெயதேவனுடன் ஆன தன் கல்யாணத்தை …………..இவள் சித்தியின் பேச்சைக் கேட்டும் ,fb ல அவன் தொழிலளர்களுக்கு செய்த அநியாயமும் கண்டு ……….அடுப்புக்கு தப்பி எண்ணெய் சட்டியிலா ?என எண்ண வைத்து ……..கல்யாணத்திற்கு முந்தின நாள் சொல்லாமல் ,கொள்ளாமல் பெங்களூர்ல வேலைக்கு போய் விடுகிறாள்.இதனால் அவமானம் அடையும் ஜெய் …….அவளை பழிவாங்க பின் தொடருகிறார்.

பின்ன என்ன வழக்கம் போல் உள்ள கதை தான் ……….சுந்தரி காஞ்சனி சிறுவயது தோழி .அவள் குடும்பமே இவளுக்கு ஆதரவாக இருக்கிறது .இப்பவும் அவள் துணைக்கு தங்கள் பெண்ணையும் இணைத்தே வேலைக்கு அனுப்புகின்றனர் .காஞ்சனி ,சுந்தரி போன பேருந்து விபத்து சிக்கி இருவருக்கும் அடி.அதிலும் சுந்தரிக்கு கொஞ்சம் அதிகம் ,நடக்க முடியாளவு காலில் அடி.இவர்களைப் பின்தொடரும் ஜெய்யே உதவி செய்ய ,பழிவாங்க வந்தவர் காதலில் விழுகிறார்.முதலில் அன்னையிடம் பழிவாங்கவே பழகுவதாக சொல்கிறான் ஜெய். அதையே மனதில் வைத்திருந்த தேவகி சரியான் தருணத்தில் காஞ்சனியிடம் சொல்லி எச்சரிக்கிறார்.

சுந்தரி அங்கே சுகேசன் என்பவரிடம் காதலில் விழ ,அதையும் விசாரிக்க காஞ்சனி ஜெய் உதவியை கோர ……..அவனும் எல்லா உதவியும் செய்து ……..கல்யாணமும் சிறப்பாக நடக்க செய்கிறான்.

இப்ப காதலை காஞ்சநியிடம் சொல்ல வந்தால் ,மகனின் நடவடிக்கையை கண்காணிக்கும் அன்னை தேவகி ,மருமகளிடம் மகனின் திட்டத்தை போட்டு கொடுத்து ,இருவர் பிரிய காரணமாகிறார்.

மகனின் உண்மை காதல்,மற்றும் வருத்தம் புரிந்து ………..தானே ஒரு திட்டம் வகுத்து இருவரையும் இணைக்கிறார்.

சாதாரண கதை தான் ,ரமணியம்மா நடையில் தொய்வின்றி சுவாரசியமாக இருக்கிறது.இந்த மாத அழகிய மங்கையர் நாவல் கதை ………..என்னிடம் லிங்க் இல்லை.

 

முன் அந்திசாரல் நீ – லதா பைஜு

முன் அந்திசாரல் நீ – லதா பைஜு

வசீகரன் – அரவிந்தன் ,சபர்மதியின் புதல்வன் . வளர் என்ற பாசத்தங்கை உண்டு.கல்லூரியில் படிக்கிறாள் திரையுலக இயக்குனராக கனவு கண்டவன்.வருமானம் வேண்டி அவன் தந்தை இறப்பால் கிடைத்த போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேருகிறான்..
ஹாசினி -sub inspecter ஆக ஹாசினி என்னும் பெண் புலி.ஆண்கள் போல மிக மன தைரியமானவள் .கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறாள். ராஜேஸ்வரி என்ற பிரபல தொழிலதிபர் மகள் .பணக்காரி.விரும்பி காவல்துறை பணியில் சேருகிறாள்.அன்னையோ கல்யாணத்திற்கு நெருக்க…………..மறுத்து வருபவள்.

இந்நிலையில் கல்லூரி படிப்பு முடித்த வளர் தன் ஆசிரியரை காதலிக்கிறாள் .நகுலன்.அவள் காதலை சொன்ன நிமிடமே கீழே விழுந்து தலையில் அடிபட,அறுவைசிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும் என்ற நிலை.இவர்களோ பணவசதியில் கீழ் நிலை.ஹாசினி தன் சலனத்தை உணராமல் இந்த பணத்தேவையை காட்டி வசீயை மணம் முடிக்கிறாள். காதல் என எண்ணி மகிழும் வசீயிடம் இது ஒப்பந்த திருமணம் என்கிறாள்.கோபம் கொண்டு மறுத்தால் ,அவன் அன்னை மூலமா வசியை மடக்கி கல்யாணம் நடக்கிறது.
நம்ஹீரோ உள்ளே இருக்கும் இயக்குனர் …….சரியாக காட்சி அமைத்து ,ஹாசினி காதலை உணர செய்கிறார் வசீ.மேலும் பரீட்சை எழுதி அதே காவல் நிலையத்தில் sub inspector ஆகவும் ஆகிறான். தன் தந்தையை கொன்ற கொலைகார்ரகளுக்கு தண்டனையும் வாங்கி தருகிறான். ஹாசினி வீட்டிற்கு வரும் சபர்மதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் காத்திருக்கு ………….அது என்ன ?
அழகிய குடும்ப கதை .அளவான திருப்பங்களுடன் மனநிறைவுடன் ,மகிழ்ச்சியான முடிவு கொண்ட கதை.

 

 

இனியொரு பிரிவில்லை – பிரேமா

இனியொரு பிரிவில்லை – பிரேமா 

சுஜா -மகேந்திரன் ,மாதவி -கண்ணன் தம்பதியர்கள் பக்கத்து வீடு ,நல்ல நண்பர்கள் ………..இவர்கள் குழந்தைகள் திவ்யா ,பிரபு இருவரும் நல்ல நட்புக்கு உதாரணம்.
அவள் நன்மையையே நாடும் நண்பன் ,பாதுகாவலன்,guide என பிரபு.திவ்யாக்கு இரு வீட்டிலும் சலுகைகள்……ஆனால் திவ்யா பெற்றோர் வசதி யானவர்கள்.பிரபு அம்மாவோ படிப்பு குறைவு என்றாலும் அவரின் மதி நுட்பம் ,ஆலோசனை ,சிக்கனத்தால் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயருது.
சிறு வயதிலேயே இருந்து ஒன்றாக படித்து ஒரே இடத்தில் வேலையும் பார்க்கிறார்கள் ……திவ்யா பெற்றோர் ஒரே பொண்ணை பிரிய மனமில்லாமல் வீட்டோடு மாப்பிள்ளை பார்க்கிறாங்க

……….அவர் சூர்யா ……….பெற்றோர் இறந்து விட தனித்து இருக்கும் அவன் இங்கே குடும்பத்தில் ஒருவராக மாறுகிறான் .
கல்யாணத்துக்குப் பின்னரும் திவ்யாவின் பிரபு நட்பு பிளஸ் பாசம் கண்டு பொறாமை கொள்கிறான் …….ஒரு கட்டத்தில் பிரபுவை பிரிந்து போக சொல்கிறான். டெல்லியில் வேலை தேடி சென்று விடுகிறான் பிரபு .அதன் பின் உயிர்ப்பு இன்றி இருக்கும் மனைவியை கண்டு பிரபு பிரிவிற்கு தான் காரணம் என்கிறான்.

பிரபு………. திவ்யா சூர்யா போட்டோவில் photoshop செய்து சூர்யா இடத்தில் பிரபுதன் படத்தை வைத்திருக்கிறான் என்ற சூர்யா உண்மையை சொல்ல ………அதிரும் மாதவி தம்பதியர் …………உண்மையை அறிய திவ்யாக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லி டெல்லியில் இருந்து வரச் செய்கின்றனர் ……….வந்தால் …………..டொட்டடொயிங்

வழக்கம்போல் நம் ட்விஸ்ட் ராணியின் ட்விஸ்ட் சூப்பர் …………அது என்னன்னு கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

ருத்ர வீணை – இந்திரா சௌந்தரராஜன்

ருத்ர வீணை – இந்திரா சௌந்தரராஜன்

வடநாட்டில் இருந்து நாடோடியாக வரும் பாபா தன்னிடம் உள்ள ருத்ர வீணையால் வறட்சியில் வாடும் தோடிபுரத்தில் மழை பொழிய செய்கிறார்.கண் தெரியாத பாட்டிக்கு கண் தெரிய வைக்கிறார் ….அடிக்காத கோவில் மணி அடிக்குது ,பாம்பு தீண்டிய தீட்சிதரை பிழைக்க வைக்கிறார் ……….தோடிபுரம் சீரும் சிறப்புமாக இருக்குது …..ஒரு எடுத்துக்காட்டு கிராமமாக …….

இந்நிலையில் அவரிடம் உள்ள அந்த வீணை பறிக்க சுற்றிலும் சதி வருகிறது ………..அதே கோவிலில் வைத்து தன் உயிர் நீக்குகிறார் ……..அது மாயமாக மறைந்து போய் விடுகிறது ……..அதை அவர் ஆன்மா மீட்டுகிற சத்தம் மட்டும் அனைவரும் கேட்கின்றனர்.இறந்தும்வீணையையும் ,ஊரையும் காவல் புரியும் பாபா ஒரு அற்புதம்.அவர் வீணையை அடைய நினைக்கும் அனைவருக்கும் சாவு நிச்சயம் …….ருத்ரன் வரவுக்காக காத்திருக்கிறார்கள் ………..

ருத்ர வீணை- இந்திரா சௌந்தரராஜன்

இது சிவன் பார்வதியையே அந்த அம்பாளையே வீணை அம்சமாக மாற்றி வாசித்த வீணை ………….அம்பாளின் சொருபம்

…………அதனால் அதில் வாசிக்க அற்புதம் நிகழும்.அதன் இருப்பிடம் நல்ல வளம் பெருகும்.நல்ல எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே வாசிக்க முடியும் ……அதாவது பொது நலம் மட்டும் கொண்டவர்கள் ……….சுய நலத்துடன் நெருங்குபவர்கள் ………….கடுமையான தண்டனை பெறுகின்றனர்.

தோடிபுரம் ஊர் கோவில் சாமி தோடீஸ்வரன் அவர் அந்த ஊருக்கே காவல் செய்கிறார்.அங்கே உள்ள நிலத்தை வேறு ஒருவருக்கும் வாங்கவோ ,விற்கவோ முடியாது .எல்லாம் சிவன் கட்டுப்பாட்டில் …………வடநாட்டு பாபா மூலமாக வந்து சேரும் வீணையை கொள்ளை அடிக்க பலர் முயல்கின்றனர்.அவர்களிடம் இருந்து காப்பாற்ற பல கட்டுகள் கட்டி பாதுகாக்க படுகிறது.

சதாசிவ சாஸ்திரிகள் குடும்பத்திடம் ஏடு கொடுக்கப்பட்டு அது நாகத்தால் காவல் காக்கப்படுகிறது.அவர்கள் வாரிசு கணேசன்.

தாசி குல பெண்டிர் வைஜெயந்தி பாபாவை காப்பாற்றுகிறார் ….அதனால் அவர்கள் வீட்டில் தங்குகிறார் பாபா ……..அவளுக்கு அரச குலத்தில் மாராட்டிய சேனாதிபதியுடன் வாழ்வு அமைந்து ……தோடீச்வரன் கோவில் தாசி ஆக நியமிக்க படுகிறாள் .மரியாதையுடன் வாழ்க்கை அமைவது பாபாவின் கருணை என எண்ணி அவர் மேலே இவளுக்கு முழு நம்பிக்கை.
நவக்கிரக மாளிகை ……….எல்லா ராசிகளின் படி அமைந்த விசித்திர மாளிகை.ஒவ்வொரு அறைக் கட்டுமானமும் ………மாறுபட்டது ………அங்கே ஒருவர் நுழைந்து வருவது முடியாத காரியம். வீணையை கோவிலில் பாபா ஒப்படைக்க ………அதை கபாளிகள்கொள்ளை அடிக்க முயற்சி,கோவில் அன்ன தனத்தில் ,தெப்பத்தில் விஷம் கலக்கின்றனர் ……..இறந்த மக்களை வீணை மீட்டி பாபா உயிர் பெற செய்கிறார்.ஆனாலும் அவர் விதி முடிந்து ………..இறக்கிறார்.வீணை கொள்ளை அடிக்க தொடும் வைஜெயந்தியின் ஊர் சுற்றி அண்ணன் ……….ருத்ரன் அவன் .அதை தொட்டதும் மனம் மாறி ……….நவக்கிரக மாளிகையில் வீணை வாசிக்கிறான்.பாப்பாக்கு பதிலாக.

கோவில் பட்டர் – மைதிலி,காயத்ரி ,சங்கரன் பட்டர் வாரிசுகள்.மைதிலி தன் தாயின் இறப்பைக் கண்ட அதிர்ச்சியால் ஊமை ஆனவள்.காயத்ரி கணேசனின் காதலி.ஏழ்மை மற்றும் ஊனம் காரணமாக மைதிலிக்கு வரன் எல்லாம் தட்டி போகுது.

கல்யாண சுந்தரம் ……..தோடீசவரன் கோவில் நாதஸ்வர வித்வான் .
இவர் மகன் சாமிநாதன் .சாமிநாதனும் ,சங்கரனும் தோழர்கள் .இவர்கள் இந்த கால பிள்ளைகள் ……..ஆச்சாரம் ,வீணை அதிசயம் …….தாசிபங்களாவில் உள்ள மர்மம் என்ன என்று அறிய ஆசை ,அதெல்லாம் பொய் ,மாயம் என்ற உணர்வும் …….இதனால் சிங்கப்பூர்ல போய் சமாதிக்க எண்ணுகின்றனர்.

நரசிம்ம பாரதி – இவர் ஒரு உபவாசகர் தஞ்சை மடத்தில் குருவிடம் பயிலும்போது பாதியிலேயே மந்திரம் ,தந்திரத்தில் நாட்டம் கொண்டு வடநாடு சென்று சித்து வேலைகள் கற்று வருகிறார்.

தன் மனைவி இழந்த கண்பார்வை திரும்ப பெற ,தன் ஊர் வளம் பெற வேண்டி ருத்ர வீணையை எடுத்து செல்ல வருகிறார்.சுந்தராம்பாள் மேல் உள்ள கலைஞனுக்கே உள்ள பொறாமையால் கல்யாண சுந்தரம் இவரை ஆதரித்து இடம் கொடுத்து ,தங்க வைக்கிறார்.

ருத்ரேச்வர் என்ற அசுரகுல மனிதனும் வீணையை அடைய வருகிறார் மைதிலி உருவில் அம்மனும் ,அசோகன் உருவில் பாபாவும் வீணையை காக்க வந்து இருப்பது அறிந்து கொள்கிறான் ருத்ரேச்வர் .மைதிலியை மணந்து ,ருத்ரனாக மாற திட்டம் போட்டு ,தன் சக்தியை இழந்து ,அம்மனிடம் தோற்றுப் போகிறார்.

சுந்தராம்பாள் – அவள் தாசிகுல வாரிசு.அந்த ஊர் மக்களின் குறைதீர்க்கும் கடவுள் ,இவள் பொண்ணு பானு .இவள் டாக்டர் .
சுந்தராம்பாள் மகன் அசோகன் சித்த சுவாதீனம் இல்லாமல் இருக்கிறான்.சுந்தராம்பாள் தினம் தாசி பங்களாவுக்கு தன் உதவியாள் திலகம் கூட சென்று வருகிறாள் .அதன் ரகசியம் அறிய பின் தொடருபவர்களுக்கு ,ஆபத்து ஏற்படுகிறது.தன் வழி தன்னோடு முடியனும் என்ற ஆசையில் தான் மகளை மருத்துவர் ஆக்குகிறாள்.சாமிநாதனுக்கு பானு மேலே காதல்,பானுக்கோ சங்கரன் மேலே காதல். மைதிலிக்கு சாமி நாதன் மேலே.

ருத்ரவீணை சிவராத்திரி முதல் ……….கோவிலில் பகிரங்கமாக வாசிக்கப்படும்.ருத்ரன் வருவான் ……..என்றும் ஏடு உத்தரவு கிடைக்கிறது ……….அதன் படி

ருத்ரன் வந்தானா?வந்தால் யாரு?தாசி பங்களா மர்மம் என்ன ?யார் காதல் வெற்றி பெற்றது …………?
ருத்ரன் யார் ………….?என்பதை அறிய படியுங்கள் ருத்ர வீணை .

நம்மை அந்த காலத்திற்கே கூட்டி போகும் எழுத்து.
அந்த சிவன் ,அம்பாளை நேரில் தரிசித்த அனுபவம் கிடைக்குது.
ருத்ர வீணை படித்தப்பின் ………..வீணை வாசிப்பதே ஒரு அருள் போல ………..என்ற உணர்வு வருவதை தடுக்க முடியலை.வாசிக்கும் பேறு கிடைத்ததில் ………….ரெம்ப மகிழ்ச்சி இருக்கு …………ஒரு துளியுண்டு கர்வம் கூட ……….

ஐந்து வழி மூன்று வாசல் ..இந்திரா சௌந்தராஜன் ..

ஐந்து வழி மூன்று வாசல் ..இந்திரா சௌந்தராஜன் ..


எவ்வளவோ கதைகள் படித்துள்ள….நான் இவர் கதை படித்ததில்லை…விரும்பி இவர் கதைகளை சின்னத்திரை தொடர்களாக கண்டதுண்டு…ஆனாலும் மந்திரம் ,இறப்பு ,கொலை என்ற பயத்தில் படித்ததில்லை .

ஆனால் தற்போதைய பிறந்தநாள் பரிசாக இந்த அரிய பொக்கிஷம் எனக்கு கிடைத்தது…


சரித்திரம் ,நிகழ்கால நிகழ்வு என இரு கால கட்டமும் கதையில் …வழக்கம் போல மர்மம் ….புதையல் தேடுதல் …என சுவாரசியத்தை கொஞ்சமும் குறையாமல் கொடுக்கும் கதை….

வெள்ளையனை எதிர்த்த வீர போராட்டம்
,(புலித்தேவர்,அம்பலத்தேவர்
)கள்ளனின் ஒரு தலைக்காதலால் ஏற்பட்ட கடத்தல் ,(காடகராயன்)போராட்டம் …
நம்மில் சதியர்கள் (வஜ்ரநாரயணன்)வெள்ளையனிடம் விலை போனது…..

ஆசிரியரின் மர்மம் பாணியும் இணைந்து…தற்காலத்தில் அதை தற்செயலாக பெறும் வரலாற்று ஆசிரியர் (ராம்நாத்…அவர் மகன் பாஸ்கர் …மகள் ஜெயந்தி,அவர் மாணவர் கலாதரன் வனத்துறை அதிகாரியாக…..

புதையலை தேடும் …எதிரிக்கூட்டம் தங்கமாணிக்கம்,சம்பத் …..இத்யாதி)

ராம்நாத் குடும்பத்திடம் குறிப்புகள் கிடைக்க அதை அவர்கள் அடைவதைக் கூறும் ….அழகான மரமக்கதை….

காதலுக்கு ராஜேந்திரன்,மீனாட்சி என்ற பழைய ஜோடி…..தற்காலத்தில் கலாதரன்,ஜெயந்தி …இனியகதை ….

சிவம் – இந்திரா சௌந்தர்ராஜன்

சிவம் – இந்திரா சௌந்தர்ராஜன்

ராஜ் நாராயணன் அமெரிக்காவில் வேலை பார்ப்பவன் .சொந்த அத்தை பொண்ணை பாரதியை கட்டஆசைப்பட்டு வருகிறான். வந்த இடத்தில் பாரதி ஜாதகத்தில் தோஷம் என்று கூறி மணம் செய்து தர பாரதியின் தந்தை மறுக்கின்றார் ………அவனோ நாத்திகன் ……ஜாதகத்தைப் பற்றி தீட்சிதர் சொல்வதை நம்ப வேண்டாம் னு தர்க்கிக்க ……..ஒன்றும் செல்லுபடி ஆகல மனம் வெறுத்து ஊருக்கு கிளம்பகிறான் .

அந்த கிராமத்தில் மறுநாள் தான் பேருந்து வசதி என அறிந்து திகைக்க ,அப்ப பாழடைந்த கோவிலை காண்கிறான் ………அந்த தீட்சிதர் நடராஜரையும் சந்திக்கிறான் ……….அவர் உன்னால் இந்த கோவிலின் மரகத சிவலிங்கத்தை கண்டுபிடிக்க முடியும் உதவுகிறாயா என வினவ ………மறுத்து அவனோ ஊருக்கு கிளம்ப ……….உன்னால் போக முடியாது என்று சவால் விடுகிறார் ……….அது போல அவன் பெட்டி பேருந்தில் வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு ………மீண்டும் ஊருக்கே திரும்பி விட்டான் .

அன்று மாலை சிவன் கோவில் செல்லும் அவன் பாரதியை கண்டு பேசிக்கொண்டு இருக்க ,கோவில் நடை இவர்கள் உள் இருப்பது ஆறியாமல் சாத்தி விடுகிறார்கள் .அன்று அங்கே கொள்ளை அடிக்க வரும் திருடர்கள் நாய்களால் துரத்தப்பட ……..இவர்களும் பயந்து ஓட …………மறைந்த மரகத நடராஜர் சிலையை கண்டு பிடிக்கிறான் ……..பின் என்ன அரசாங்க விசாரணை ,கோவில் தோல் பொருள் ஆராய்ச்சி வசம் ஒப்படைக்கப்பட்டு ……இன்னும் அதிசயங்கள் நடக்கும் என்ற தீட்சிதர் நம்பிக்கை ,சித்தர் ,பூர்வ ஜென்ம தொடர்பு,மற்றும் ………..ஒரு புறம் கொள்ளையர்களால் தொல்லை ………என வழக்கம்போல் ஏகப்பட்ட முடிச்சுகளுடன் சுவாரஸ்யம் குறையா கதை ………..

படித்தஒருவாரம் அந்த லிங்கத்தை மறக்க முடியல ………அவ்வளவு தூரம் நம்மை எழுத்தால் கட்டி போட்டாரா ?இல்லை அதையும் மீறிய சக்தியா ?……….ரெம்ப பிடித்தது …………எனக்கு

Read more: http://www.penmai.com/forums/stories-novels/88846-novel-discussion-7-a-960.html#ixzz3oHTl3t3P

பாண்டியன் நெடுங்காவியம்…..ஶ்ரீஜா

பாண்டியன் நெடுங்காவியம்…..ஶ்ரீஜா

தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் ….பசுமரத்து ஆனி போல் …மனதில் பதிந்த வரலாற்று பெயர் …அவர் வரலாற்று பின்னனி என்ற போதே வாசிக்கும் ஆவல் ஏற்பட்டது…

ஆசிரியர் குறிப்பிட்டது போல …சோழர்கள் வரலாறு பேசியளவு….எழுத்துலகம் பாண்டியரை பேசலையே ….நானும் ஏற்கிறேன் ….

இந்த பாண்டிய காவியம் …மறத்தமிழனின் பெருமையை,அவன் வாழ்க்கை முறையை உணவு முதல் உயிர்ப்புடன் சொல்கிறது…முற்றிலும் மாறுபட்ட வரலாற்று காவியம் …பூண்டு குழம்பு முதல் முதுமக்கள் தாழி வரை….கற்பு,கல்வி என எங்கும் ….நம் வாழ்வின் முன்னோர்களை கண்டாற்போல ….உணர்வு.

புகழ் பெற்ற கண்ணகியை பேசும் …நாம் அழிந்த மதுரையை மீண்டும் செதுக்கிய சிற்பியின் கதை.

கொஞ்சம் கூட சுவை குறையாமல் …எடுத்த புத்தகத்தை வைக்க முடியல…உண்மையிலேயே …வரலாற்று கதை படைப்பதில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள் …வாழ்த்துகள்
இளங்கோவன் அண்ணா தந்த பட்டம் மிக பொருத்தமே…தமிழ் கதை மாமணி…

உங்கள் அணிந்துரை …அழகுக்கு அழகு சேர்த்ததே…
நானும் முக்கனிகளின் சுவையிலே சொக்கினேன் அண்ணா…..

கல்கி, சாண்டில்யன் வழியில் ….மீண்டும் பெற்றோமே வரலாற்று கதை ஆசிரியரை…என்றும் தமிழ்வாழ்க ….