கவிதைகள்

அன்பில் 
ஆளுமையில் 
இயல்பில்
ஈரத்தாய்
என்னை …
உணர்ந்தேன் 
உலகை 
அடைந்தேன் 
உவகை …
கொண்டேன் 
எங்கள் முத்தே(தூத்துக்குடி )
ஒப்பில்லா …
ஈஸ்வரியே

இணையம் எனும் கடலில் 
திசை அறியா படகாய் 
தத்தளித்தேன் ….
வந்தாய் கலங்கரை விளக்காய்…
வழிகாட்டினாய்
ஆசானாக …
அன்பாக தட்டி கொடுத்து,
நட்பாக …
பங்கேற்று…
அரவணைத்தாய்
மூத்த சகோதரியாய்
அமுதாய் 
பொழிந்த என் 
அமிர்தே…
நீ வாழிய ….
பல்லாண்டுகள் .

பெண்மை கடலில்

குளித்த முத்துக்கள்

அன்பு ,

பாசம்

விட்டுகொடுத்தல்

பகிர்தல்

சுயம்

என ஐம்பொன்னில்

கோர்த்து

அணிந்தோம் அழகாக

தோழியாய்

சகோதரியாய்

தாயாய்

மகளாய்

உறவாய்

தொடர்ந்தோம் ……..

தொடருவோம் ……….

அடுத்த பிறவியிலும் .

 

 

 

அன்புக் கூடு ,

பாசக் கூடு

நேசக் கூடு

என்றே இறுமாந்திருந்தேன்

நட்பு என்னும்

மாயையில்

அறிவு கண்ணை மறைக்க

பூம் பூம் மாடாய்

சுகித்திருக்க ,

எட்டி எட்டிப் போயும்

சுற்றி சுற்றி வட்ட மிட்ட

சிட்டுக்குருவி ஒன்று.

மகிழ்வாய்

சிறகடித்து

என் மாயை விலக்கி

மெய்யுருவம்

காண்பித்ததே ………

என்னை மீட்க வந்த

குலசாமியோ ………..

சுப்பனுக்கு பாடம் சொன்ன

தகப்பன் சாமியோ ……….

மேகி வாழிய

நீ பல்லாண்டு

ஆண்பிள்ளை
வாரிசாய் கொண்டாடி,
தந்தையின் வீரமாய் ,
அன்னையின் பெருமையாய் ….
அண்ணனாய் அரட்டலும்,அரவணைப்பும்,
தம்பியாய் நட்பும் ,குறும்பும் ,
கணவனாய் காதலும் ,,மாப்பிள்ளை முறுக்கும்,
கொண்ட தன்மானசிங்கம் …………….
தன் மகள் என்னும் தேவதைக்கு
சேவகனாய் ,தாயுமானவனாய் …..
மாறும் அதிசய மானுட தெய்வம் .
ஆண் ………

காதல்

காதல் புனிதமானது
அது என் வீடு வரை
வராத போது,

காதல் சோதனையானது
என் தங்கை
காதலிக்கும் போது,

காதல் சுகமானது
நான் காதலிக்கப் பாடும்போது

காதல் வேதனையானது
கல்யாணத்திற்குப் பின்
காதல் ……………
தொலைந்து போகும்போது

காதல் இனிமையானது
முதுமையிலும்
உணரும்போது.

 

வருங்கால தூண்கள்

நேற்று
அரசுப் பள்ளிகள்
அறிவை விதைத்து
நன் குடிமக்களை
அறுவடை செய்தனர்

இன்று
அரசியல்வாதிகள்
கல்விக் கூடங்கள்
கட்டிடங்களை விதைத்து
பணத்தை அறுவடை செய்கின்றனர்

நாளை
நன்மக்களுக்கு
என் செய்வர்……………….?

உப்பை வைரமாய் பாவித்து
போலி நட்பில் ,அன்பில் தொலைந்து ,
என்னையே தொலைத்து …….
திக்கற்று …..திகைத்து ….
ஜீவனின்றி …தளர்ந்தேன்…….
அழகிய கானகத்தில் …
உற்சாக ஊற்றாய் தோழியர் இருவர் ……………
தானும் சிரித்து …………பிறரையும் சிரிக்க வைத்த …
நிகழ்வு ஈர்க்க ……………நெருங்கினேன்…………..
தயங்கினேன் ………….பார்வை வட்டத்தில் விழுந்த …………
என்னைக் கண்டு ………..இருவரும் ஓடிவந்து …………
என்னை அணைத்து ………….
அன்பால் அரவணைத்து ……….
உற்சாக வெள்ளத்தில் முழ்கடித்து .
நான் உண்ட ஆலகாலத்தை ……
அன்பால் அமுதாக்கி …………
புத்துயிர் தந்து …………
புனர்வாழ்வு அளித்த ………
சிங்கப்பூர் சீமாட்டியே ……..
என்னை உச்சி முகர்ந்து ……….
மகிழும் என் மச்சியே …………
வாழிய ………..வாழிய ……..
இன்னும் நூறு ஆண்டு

பெண்மை தந்த துருவ நட்சத்திரம்
அழகிய ஆழி புயல் ….
செல்ல பூனைக்குட்டி …
அன்பின் அரசி…
எங்கள் இளவரசி…
அன்பு தொல்லை …
அன்னை ஆக்கினாள் என்னை…
இனிய கனியின் திருமதியே…
வாழ்க பல்லாண்டுகள் …

தங்கம்

மங்கையின் மோகம்.
கணவனின் கௌரவம்
வங்கியின் கையிருப்பு
முதலாளியின் முதலீடு
குடியானவனின் கடன்
ஏழையின் கனவு
முதிர்கன்னியின் கண்ணீர்

 

என்று திருந்துவோம்…..?

தினையும் தேனும்,
கம்புஞ்சோறு,…
சோளத்தோசை…
(வெள்ளச்சோளம்)..
தேவாமிர்தம்…
(நீச்சத்தண்ணீர்)..
நல்ல நிலக்கடலை
சத்தான எள்ளு..
அருமைக் கருப்பட்டி..
ஆரோக்கிய பதனீர்..
நல்ல ஆலமரப்பிள்ளையார்
வேப்பமர மாரியாத்தா..
சுத்தமான காற்று..
அயராத உழைப்பு..
தேவையான ஓய்வு..
கபடி,கிட்டிப்புள்..
பச்சக்குதிரை…
உரத்திற்கு நொண்டி..
அறிவுக்கு பாண்டி..
கேளிக்கைக்கு தாயம் ..
என்று ஆரோக்கிய வாழ்வு 
வாழ்ந்தவர்களை…
கவர்ச்சிக் காட்டி..
ஆங்கில மோகமும்..
அந்நிய போதையால் ..
அழிவை நோக்கி…
சக்கை கோதுமை..
கொழுப்பு பருப்புகள்..
கொல்லும் எண்ணெய்..
உயிர்க்கொல்லி குளிர்பானங்கள்..
தரமான தண்ணீர் என்று..
கனிம நீரைக் குடித்து..
காசு கொடுத்து நோயை வாங்கும்..
அறிவாளிகள் நாம் ….
என்று திருந்துவோம்…..?

தினைப்பனியாரம்,
சோளத்தோசை,
கம்பங்கஞ்சி..
கேழ்வரகு அடை..
உளுந்த வடை..
ஓலைக்கொழுக்கட்டை..
இடியாப்பம்..
இட்லி…என்று ..
பருப்பு பாயாசம்
எள்ளுருண்டை
இஞ்சி மரப்பா..
சுக்கு காப்பி..
திங்கிறதில் ….
நம்மை அடிச்சுக்கவே 
முடியாது…
தமிழன்டா ..

பீசா…
பர்க்கர்..
பிரட்..
பரோட்டா..
பூரி…
நூடுல்ஸ்..
ஒரே விசத்திற்கு…(மைதா விற்கு )
விதவிதமாக பெயர்கள்..

நாகரீகம் என்று 
சொல்ற ..
மடத்தமிழர்கள்…
குமுறல்
ஒட்டாத சட்டியில்
சமைத்து…
உடலோடு
ஒட்டா உணவும்,
ஊரோடு,உறவோடு
ஒட்டா வாழ்வும் 
வாழ்கிறோம்…!

மகளிர்

பொறியாளர்..
மருத்துவர்..
விமானி…
விவசாய சாதனை..
இரயில் ஓட்டுனர்
இராணுவம்…
30 சதவீதம்..
50 சதவீதம்…
வருமான தன்னிறைவு..
……….
எல்லாம் மாயை 
என்ற…..
நிதர்சனத்தை உணர்த்தும்
அவள் சமையலறை..!!

என்று விடியும்….?
வாரிசு அரசியல்
கதர் அரசியல்
காவி அரசியல்
கட்அவுட் அரசியல்
ஸ்டிக்கர் அரசியல் 
பார்த்து ..பார்த்து
கண்ணிய அரசியல்
சேவை அரசியல்
நேர்மை அரசியல்
எல்லாம் மறந்து ..
மறக்கடித்து …..
மறைந்தே போச்சே..!!!

Leave a comment